love fightஉன் மௌனத்தின்
நிசப்த அலைவரிசைகளில்
மொழிபெயர்க்கப்படுவது
நமக்கான ஊடலாகவே
இருக்கலாம்....!

நீ என்பதும்
நான் என்பதும்
நீ என்றே வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
நம் காதல் அகராதிகளில்....!

ஏமாற்றுதல் முதிர்நிலை
ஏமாறுதல் தளிர்நிலை...!

"காதலும் கடந்து போகும்"
என்ற வாசகம் மட்டுமே
கால சக்கரத்தால்
புலம் பெயர்ந்து விடுகிறது....!

பார்க்கவல்ல உயரமும்
உனதான என் நேசங்களின்
குறைப்பாடாகவே
இருந்து விட்டு போகிறது...!

நேசத்தை மறுத்தளித்தலும்
மாறாதவைகளும்
புலன்களை கடந்த நிலையெனவே
அறியப்படுகிறது....!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.