அதிகாலை எழுவது எப்போதும் பிடித்த ஏஞ்சலுக்கு

அப்பாவைப் போல் இருக்கப் பிடிக்கும்

அம்மா சமையலாக வராத ஏஞ்சலின் சமையல்

எப்போதும் அவள் அப்பாவிற்குப் பிடிக்கும்

கண்களை மூடி, கடவுளை வணங்கும் போது

சில நேரத்துக் கண்ணீரைத் துடைக்கும் அப்பாவை

ஒரு போதும் கண் திறந்து பார்த்து, கடவுளை சந்தேகப்பட்டதில்லை

துயர் மிகு நாளொன்றில் அம்மலர்வளைத்திலிருந்து உதிர்ந்த

துளசியின் சிறு துரும்பு ஆழ்ந்த கேவல்களை திறந்துவிட்டபின்

தினமும் ஏஞ்சல் நீரூற்றிப் பார்க்கும்

இத் துளசிச்செடியில் பூத்திருந்தது சில பூக்கள்.

அப்பாவின் புகைப்படத்தை திரும்பிப் புன்னகைக்கிறாள்.

காற்று வந்து துடைக்கிறது ஏஞ்சலின் கண்ணீரை.

- முருகன்.சுந்தரபாண்டியன், திருநெல்வேலி.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.