modern artஎல்லா சித்திரங்களையும்
அழித்து விட்டு ஓர்
ஓவியனாக
எட்டிக் குதித்தேன்...
வெள்ளைப் பலகையும்
மாடர்ன் ஆர்ட் -ஆக
தொங்கிக் கொண்டிருப்பதாக
பார்த்துக் கொண்டிருந்த
அந்தக் கடைசி இருவரை
நான் கவனிக்கவில்லை...
முத்தமிட சிறந்த இடமாக
அவர்கள் நினைக்கும் முன்
நான் ஓடிச் சென்று
வெகுதூரம் பறந்து சென்று
வானத்துக்கு அப்பால்
ஒரு காதில்லாத தேவ தூதனாக
தொடுவானத்தில் வரைந்து கொள்ளத்
துவங்கினேன்
நான் யாரென்ற சித்திரங்களை...

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.