மற்றுமொரு இரவில் காத்திருக்கிறேன்

குறுஞ்செய்திக்காக‌க் காத்திருந்த இரவு

இப்படித்தான் இருந்தது

செல்லச் சண்டைக்குப்பின்

அழைக்கவிருக்கும் இரவும்

இப்படித்தான் இருக்கும்

நள்ளிரவில் அழைத்த இரவு

இப்படித்தான் இருந்தது.

காதலை எவனோ ஒருத்தனுடன்

ஒப்பிட்ட இரவு

இன்னும் கொஞ்சம் கொடூரம்

ஒரு கோப்பை தவறுடன்

புகைசூழ் நிலை பொழுதில்

உன் திருமண நாளின் இரவு

இப்படித்தான் இருக்கிறது.

0

எனக்குத் தெரியும்

காதலியின் திருமணத்திற்கு

வாழ்த்து சொன்னவனை

கையை அறுத்துக் கொண்டவனை

புதுக்காதலியுடன் போய் நின்றவனை

ஊரைவிட்டுப் போய் குழந்தையுடன் திரும்பி வந்தவனை

தண்ணியடித்து தெருவில் கிடந்தவனை

நண்பர்களுக்கு விருந்து வைத்தவனை

மாப்பிளையை தெருவில் விரட்டி அடித்தவனை

எனக்கு இன்னும் நன்றாகத் தெரியும்

இதில் எவன் போலவும் இல்லாத என்னை.

- லதாமகன் 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.