எனக்கும் கவிதைகளுக்குமான
இடைவெளி வேகமாக வளர்கிறது
இடையே
வெறுமையின் விதையை
யார் தூவியிருக்கக் கூடும்?

மரண தண்டனைக் கைதியாய்
நான் எதுவும் செய்வதற்கில்லை
வேரூன்றி வளரும் வெறுமையை
பார்த்து வேதனையுறுவதைத் தவிர

கூடும் பலவோடைகள்
அருவியாய்க் குதிப்பது போல்
என்றேனுமொருநாள் என்னுள்
எண்ணங்கள் கூடிப் பெருகும்
வெறுமையின் வேரை
அப்போது நானறுப்பேன்

- முத்துசாமி பழனியப்பன்

 

 

 

Comments

2 comments

2
balachandar
கவிதை எழுத தோற்ற தருணங்களை, அழகா எழுதி இருக்ககீன்க.. அருமை....
Muthusamy Palaniappan
Thanks balachandar

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.