love failure 233எனக்கும் உனக்கும்
இடையிலான
அந்தக் கதவுகளை
நான் தட்டிக்கொண்டே இருக்கிறேன்
நீ மூடிக்கொண்டே இருக்கிறாய்

காலங்காலமாய் இதுவே பழகிவிட்டது

எப்போதும் அந்தக் கதவு
மூடியே இருப்பதால்
நான் உள்ளே வருவதும் இல்லை
நீ வெளியே போவதும் இல்லை

உன்னைப் பாதுகாக்க
கதவுகளை அமைத்த நீ
அந்தக் கதவுகளைப் பாதுகாக்கவே
உன்னை அர்ப்பணித்தாய்
வாழ்வின் உச்சபச்ச
முரண்நிலை இது

நான் தட்டுவதை நிறுத்தினாலோ
நீ மூடுவதை நிறுத்தினாலோ
நமக்குள் ஒரு பயம்
உருளத் துவங்குகிறது

அதனால் தானோ என்னவோ
நான் தட்டிக்கொண்டே இருக்கிறேன்
நீ மூடிக்கொண்டே இருக்கிறாய்

தட்டுவதும் மூடுவதும்
நிற்கப் போவதேயில்லை
அந்தக் கதவுகளை
கழற்றி எறியாத வரையில்

- ப்ரணா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.