பாண்டியாடிக் கொண்டிருந்த
பாவாடைச் சட்டைச் சிறுமி
பாதியாட்டத்தில்
வயிற்றைப் பிடித்தமர
ஐந்தாறு பெண்கள் வந்து
அள்ளிக் கொண்டு போனார்கள்.
இன்னமும் அவள்
தாண்டியிருக்காத பாதிக் கோடுகள்
அப்படியே மீய்ந்துபோனது
இனி என்றைக்குமே அவளால்
தீண்டப்படாத கோடுகளாய்...
கீற்றில் தேட...
பூப்பெய்தல்
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்