boy 334தூங்கும் போதும்
சட்டென
மேலெழும்பும் கை
காற்றினில்
வீட்டுப் பாடம்
எழுதுகிறது....
பிஞ்சுக் கைகளில்
உலக மயமாக்கலும்
நவீன வாழ்வு முறையும்
பிரம்போடு
தலை
விரித்தாடுவதாக
தோன்றும் எனக்குள்
விடியலைச் சுமக்கும்
நடுக்கத்தோடு
ஒரு புத்தகம்
விரிகிறது...
அது அடுத்த
நாளுக்கான
வீட்டுப் பாடம்....

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.