கீற்றில் தேட...

முதன் முதலாக
ஆப்பிளில் தான்
அந்தக் காதல் இருந்தது

பின்னர் அன்னப்பறவையிடமும்
புறாக்களிடமும் கொஞ்சகாலம்
தங்கியிருந்தது

பறந்துதிரிந்த களைப்பில்
ரோஜாக்களிடம் சென்று
ஓய்வெடுத்துக்கொண்டது

அதுவும் சலித்துப்போக
கடிதம், கைக்குட்டை,
மோதிரம், பேனா
என தன் இருப்பிடத்தை
மாற்றிக் கொண்டேயிருந்தது

சமீபத்திய சில தினங்களாக
கடவுச் சொற்களுக்குள்
தன்னை ஒளித்துக்கொண்டிருக்கும்
அந்தக் காதல்
கடைசி வரை மனிதர்களில் மட்டும்
தங்கவேயில்லை.

- தி.விக்னேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.