கீற்றில் தேட...

lover 3031.
வார்த்தைகளையாவது
ஈரமாக வை
கவிதைப் பயிறாவது முளைக்கும்.

2.
உனக்கும்
எனக்குமான‌
இடைவெளியில்
நீண்டு படுத்துக் கிடக்கிறது
வானம்.

3.
உன்
பெருங்கடலில் தேங்கிய
சிறு நதிதான்
நான்.

4.
நீயேன்டி சிரித்துத் தொலைந்தாய்
கூச்சமில்லாமல்
எடுக்கமுடியவில்லை
குறுந்தொகைப்பாடலை
என்னால்.
பள்ளியறை ஞாபகங்களில் மூழ்கிவிடுகிறது
என் ஒட்டுமொத்த வெட்கமும்.

5.
தொடர்ந்து நட
நீயும் பாதையாவாய்

6.
பொழுதுகள் கழிந்து போன
ஒரு பின்னிரவில்
நெருக்கமாகிக்கொண்டிருந்த
நினைவுகள் மாநாட்டில்
நிறைவேறிய கனவுத் தீர்மானத்தைத் துரத்தியது.
தெருவில் நின்ற
அந்த நாயின் குரல்.

7.
இரவின்
அழுகுரலைக் கண்டு கொள்ளாமல்
வெளிச்சத் திரிகொளுத்தி
வேடிக்கை காட்டி மகிழ்கிறது
நம் மனசு.

- வாலிதாசன், சென்னை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.