கீற்றில் தேட...

எந்தவொரு செயலும்
எந்தவொரு உணவும்
எந்தவொரு உறவும்
எந்தவொரு உணர்வும்
எந்தவொரு வார்த்தையும்
எந்தவொரு ஊரும்
எந்தவொரு புத்தகமும்
எந்தவொரு வீடும்
எந்தவொரு செடியும்
எந்தவொரு கோளும்
ஏதேனும் ஒரு சாயலைக் கொண்டுதானிருக்கிறது
இதோ இந்தக் கவிதையும் கூட...


* * * * *

என்றோ
எதற்கோ
எப்போதோ
எழுதப்பட்ட சில கவிதைகள்
அவ்வப்போது உயிர்பெற்றெழுகின்றன

அன்று
அதற்கு
அப்போது
எழுதப்பட்ட சில கவிதைகள்
இன்று உனக்கானவையாகின்றன

* * * * *

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)