ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
எச்சமர் ஆயினும் எங்கே பொருதினும்
நிச்சய வெற்றி வலியுடை யோர்க்கே
பார்ப்பனர் போற்றும் சாத்திரம் தனிலும்
சீர்மையாய் ஒப்பிய சொல்லின் படியே
திறனுடை யோரும் திறனிலர் தானும்
பிறழ்வின்றி அனைத்து வகுப்பிலும் உண்டு
இருப்பினும் பார்ப்பனர் மட்டுமே வெல்வது
சுருக்கத்தில் விளங்காப் புதுமை அன்றோ
(ஒருவனை ஒருவன் கொல்லுதலும், ஒருவனுக்கு ஒருவன் தோற்றலும், இந்த உலகத்திலே புதுமை அன்று. எந்த ஒரு போரானாலும், அது எங்கே நடந்தாலும் வலிமை உடையோரே நிச்சயமாக வெற்றியை அடைவர். பார்ப்பனர்கள் போற்றும் (பகவத் கீதை, மனு நீதி, பராசர நீதி போன்ற) சாத்திரங்களிலும், திறமை உடையவர்களும், திறமை இல்லாதவர்களும் விதி விலக்கு இல்லாமல் அனைத்து வகுப்பு மக்களிலும் உண்டு என்று ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் (திறமையுடையோர் வெல்லும் வாய்ப்புப் போரில் திறமைக் குறைவாக இருந்தாலும்) பார்ப்பனர்கள் மட்டும் வெல்வது எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத புதுமையாக இருக்கிறதே!)
- இராமியா