என்மீ தாசையும் மக்களின் பாசமும்
குன்றனை உழைப்பையும் கடுகென ஆக்கும்
ஆயினும் முடிவில் முதலிக்கே போவதும்
பேயினும் கேடாய் உறுத்தும் மேலரும்
கடுகனை உழைப்பையும் குன்றென அழுத்தும்
சுடுகின்ற சூழல் தன்னை மாற்ற
உழைப்பவர் அரசை அமைத்திட முயல்வாய்
 

((என் வாழ்க்கைத் துணையே) என் மீது நீ கொண்டுள்ள ஆசையும், நம் மக்களின் மீது நாம் கெண்டுள்ள பாசமும், மலையளவு உழைப்பையும் கடுகளவு சிறியதாக ஆக்கும். ஆனால் நம் உழைப்பின் பயன் அனைத்தும் முடிவில் முதலாளிகளுக்கே போய்ச் சேருவதும், (நமக்கு மேல் அமர்ந்து கொண்டு இருக்கும்) மேல் நிலை அதிகாரிகள் நம்மைப் பேயினும் கேடாக  உறுத்திக் கொண்டு இருப்பதும், கடுகளவு உழைப்பையும் மலையளவு போன்ற அழுத்தத்தைக் கொடுக்கின்றன. (நம்மைச்) சுடுகின்ற இச்சூழலை மாற்ற உழைப்பவர் அரசான சோஷலிச அரசை அமைத்திட முயல்வாய்.)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.