நேற்றைப் போலவே
மொழியற்றதாகி விடுகிறது
நிலவிடம்
நான் பகிர்ந்து கொள்ள இருக்கும்
இன்றைய வருத்தங்கள்.

வைகறையில் மலரக் காத்திருக்கும்
மொட்டுக்களின் மேல்...
எனது வருத்தங்கள் பனித்துளிகளாய்..
துளிர்ப்பதில் விருப்பம் இல்லை.

சிரித்தலைப் பற்றிய எனது
நேற்றைய கனவுகள்....
இன்றும் வந்து அமர்ந்து கொள்கிறது
எனது இரவுகளின் மேல்.
 
தன் கீழ் அசுத்தம் செய்பவனைப் பற்றிய
துக்கங்களை வெளிச் சொல்ல இயலாத
மரங்களைப் போல் வளர்கிறேன் நான்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.