முள் குத்தி அழுத மகளை
தேற்ற வழியன்றி
திணறும் வேளையில்..
அவள் வலி மறந்து
அவள் பார்த்து அழுதுகொண்டிருந்ததோ ...
செவ்வனே சாய்த்துவைத்து
செதில் செதிலாய் நகம்பெயர்த்து
லாவகமாய் அவனொருவன்
அடித்து அடித்திறக்கிய
லாடமேறும் காளை மாட்டை!
இவ்வளவு நாட்கள்
உணர்ந்திராத ஒரு வலியில் ..
நானும் அழ ஆரம்பித்திருந்தேன் அவளுடன்!
கீற்றில் தேட...
வலி
- விவரங்கள்
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
- பிரிவு: கவிதைகள்