lady_269மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்து கசிகிறது எனதன்பு - நீயோ
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன் - நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு

புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

- செ.சுஜாதா, பெங்களூர்.

Comments

5 comments

5
இளங்கோ
@ செ. சுஜாதா
*
வெறுமனே
அருமை என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்த விடாமல் மேலும் கொஞ்சம் அதைப் பற்றி எழுதத் தூண்டிய கவிதைக்கு நன்றி..

அன்பின் தீக்கொடி -
தலைப்பிலிருந்தே உள்ளே இழுத்துக் கொண்டன சொற்கள்

//புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு//

பேச்சற்று போகச் செய்யும் பதம்..

( முதல் பத்தியைப் பற்றி எழுதவே மனம் பதறுகிறது )

--இளங்கோ
சோமா
சுஜாதாவிற்கு...

வலியைக் கொடுக்கக்கூடிய வரிகள் மிகவும் லாவகப்பட்டிருக்கிறது உங்கள் கரங்களுக்கு.....தொடருங்கள்..
se.sujatha
thank you mr.ilango and mr.soma.
பாரதி அட்சயா
என்ன ஒரு சொல்லாடல்..வீச்சு..
susilamanthiram
Please update keetru Website Page for more information..Give Some More Stories and Etc..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.