*
கான்க்ரீட் பெட்டிக்குள்ளிருந்து
வெளியேறும் கால்கள்
லெதர் ஷூக்குள் நடந்து
உலோக யந்திரத்தை இயக்குகிறது

ஓசோன் படலத்தைப் பொத்தலிட்டு விரைந்தபடி
காலத்தின் முள்ளை ஒடித்து
ஊற்றும் வெயிலில் நனைந்து
லட்சங்களையும் கோடிகளையும்
கணக்கில் ஏற்றி இறக்கி சுழியிடும்
விரல்களை
ஓய்வு நேரத்தில் கீபோர்டில் தட்டித் தட்டி
அயல் மொழியைத் தமிழாக்கி
செய்து விடுகிறது

ஒரு கவிதையாவது

*******
- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
சோமா
இளங்கோவிற்கு...என்னுள் உறுத்தலாக இருக்கிறது..நானும் அயல் மொழியின் வழியாய்த்தான் நம் மொழிக் குறியீடுகளைப் பெறுகிறேன்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.