உன் தொடர் பார்வையின்
மென் அதிர்வுகளால்
கொதித்தடங்கும் முயற்சியில்
தவிப்புடன் தோற்றுப் போன
நூறாயிரம் எரிமலைகள்
என் ம்னதிற்குள்

எதையும் அறிந்து கொள்ள
முடியாத மன நிலையில்
எரிமலைகளின் ஓரங்களில்
காற்றிற்குத் தலையாட்டும்
சிறிய மஞ்சள் பூக்களாய் நீ

உதிர்ந்த மஞ்சள் பூக்களின்
குளிர் மகரந்தத்தால்
எரிமலைகளின் கொதிப்பு
சற்றே அடங்கும் நேரத்தில்
நெற்றியில் நீ பதித்த
குளிர் முத்தத்தால்
தள்ளாடியபடி இருக்கிறது
மகரந்தத் துகள்களில்
முழுவதும் மூழ்கிப் போன
எரிமலைகள் மீண்டும் ஒரு முறை

Comments

1 comment

1
சோமா
குளிர் முத்தத்தால்
தள்ளாடியபடி இருக்கிறது
மகரந்தத் துகள்களில்
முழுவதும் மூழ்கிப் போன
எரிமலைகள் வ்மீண்டும் ஒரு முறை.....
எங்கே முத்தத்தை விட்டு விட்டீர்களோ என்று பார்த்தேன்....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.