*
அது கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

நன்றி மறக்கும் செயலை
மறக்காமல் நிறைவேற்றுவது

சினத்தின் நிறம் மங்கா சூட்சுமத்தை
ரகசியமாய் அடைத்து வைப்பது

வாதத்துக்கென அமைக்கப்பட்ட மேஜையின் மீது
சம்பந்தமில்லாத ஓர் உரையாடலை கிறுக்கிப் பழகுவது

நெடுநாளையச் சந்திப்புக்குப் பிறகு
பார்வைத் தாழ்த்தி பதில் சொல்வது

பால்யத்தின் ஞாபகங்களைக் கூசாமல்
பொய்ப் பூசி மெருகேற்றுவது

முதல் காதலின் கடைசிப் பொய்யை
ஆரம்பத்திலிருந்து நிஜமாக்க முயல்வது

நாட்குறிப்பின் நம்பகத் தன்மையை
தூசுத் தட்டி நிரூபிப்பது என்பது

கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

*********
--இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
சோமா
பால்யத்தின் ஞாபகங்களைக் கூசாமல் பொய்ப் பூசி மெருகேற்றுவது முதல்காதலின் கடைசிப் பொய்யை
ஆரம்பத்திலிருந்து நிஜமாக்க முயல்வது........
எல்லோரும் செய்கிற எதார்த்த விசயங்களை இலாவகமாகப் பிடித்திருக்கிறீர்கள்...........
chinnappayal
இளங்கோ'வின் கவிதைகளில் எனக்குப் படித்தவுடன் புரிந்துவிடக்கூடிய ஒன்று இது ...மற்றதெல்லாம் நாட்கணக்கில் சில சமயம் வாரக்கணக்கில் கூட ஆகும்..! :-)
இளங்கோ
@ சோமா

தொடர்ந்து எனது கவிதைகளை வாசித்து நேசிப்பதற்கு ஒரு நெஞ்சார்ந்த நன்றி..!

@ ராம்

அன்புக்கு நன்றி.. ராம்..!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.