வெகு இயல்பாக இன்றளவும்
நாம் ஒருபோதும்
பரிமாறிக் கொள்வதில்லை
வேண்டுமளவு முத்தங்களை

ஒவ்வொரு முறையும்
ஒரு தற்காலிக நிகழ்வாக
இருப்பதற்கான
சூழ்நிலைகளை
முதலில் ஏற்படுத்திக் கொள்கிறோம்

நெடிய எதிபார்பின்
தவிப்பான தருணங்களிலும் கூட
ஒளித்து வைக்க முயல்கிறோம்
நமக்கான முத்தங்களை
யாரும் அறியாமல் இருக்கும் பொருட்டு

மூக்சிறைக்கும் முதுமையில்தான்
முத்தங்களை பகிர்ந்து கொள்கிறோம்
முடிந்த வரை எந்தப்
பீடிகையும் இல்லாமல்
ஒரு குழந்தையின் துள்ளலுடன்

இப்படியாக நாம் ஒளித்து வைத்த
முத்தங்கள் எல்லாம்
பலரும் அறியும் போருட்டு
நமக்கு எப்படியோ
மீண்டும் கிடைத்து விடுகிறது
கடைசியாக காட்சிப் பொருளாய்
நாம் தேகம் கிடத்திய நிலையில்
மனமுறுகி நம்மை வழியனுப்பும்
பல நெற்றி முத்தங்களாய்

Comments

3 comments

3
சோமா
பிரேம பிரபா அவர்கள் முத்தத்தில் ஒரு ஆராய்வு நடத்தி விட்டுத்தான் நகர்வது என்று கங்கணம் கட்டியுள்ளார் போலும். அவருக்கு மட்டும் முத்தம் வெவ்வேறு முகமூடி அணிந்து காட்சியளிக்கிறது. நமக்கு அதைக் காட்டுகிறார். தொடருங்கள் அடுத்த முத்தத்திற்குக் காத்துக் கிடக்கிறோம்.
கி.பிரபா
முத்தம். முதல் முத்தத்தில் கிடைக்கும் அல்லது பெறும் ஓர் உணர்வு உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அதே வேளையில் கொடுப்பவரும் பெறுபவரும் என இருவருக்கும் உள்ள உணர்வைப் பொறுத்தே முத்தத்தின் சுவை கூடும் அல்லது குறையும். இருப்பினும் மனிதன் தன் ஆழ்ந்த அன்பைக் காட்டும் ஓர் அடையாளமே "முத்தம்".ஓசையின்றி ஆசையை வெளிப்படுத்தும் ஓர் ஒலியே ஆகும் எப்படியோ மறந்து போன முத்தத்தினைப் பற்றிச் சிந்திக்கக் கிடைத்த ஒரு வசன கவிதையாகக் காண முடிகிறது.
தினேஷ்
நல்ல ரசனை... நல்ல கவிதை.. வாழ்த்துகள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.