இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்து

படையல் செய்ய துணிந்தவரின்

வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்

பிள்ளைக்கறி சமைத்து

படையல் வைக்கமுயன்றவரின்

வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்

சுண்ணாம்புக்காளவாயில்

தம்மையே சுடமுயன்றவரின்

வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்

கிடைக்காத சந்தனக்கட்டைகளுக்கெனத்

தம் கைகளையே எலும்பு வரை

தேய்த்து எடுத்தவரின்

வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்

தம் சுயத்தை நிரூபிக்க

தீயினிற்புகவும் முயற்சித்தவரின்

வன்முறையைத்தடுத்தாட்கொள்ள கடவுள் வந்தார்

தம் கால்களை முதலையின்

வாயிற்கொடுத்து கதறிய அஃறிணையின் மீதான வன்முறையைத்தடுத்தாட்கொள்ளக்கூட கடவுள் வந்தார்

அருகில் நடந்த வன்முறைகளை

இதுகாறும் கண்டுகொள்ளாமலிருந்த

அதே கடவுளை யாசிக்க

இந்தக்கவிதையை நேர்மறையாக

முடிக்க விரும்பி

தலைப்பை மீள வாசிக்கக்கோருகிறேன்.

அதுவே உங்களுக்கும் விருப்பமெனில்

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
சோமா
ஒரு வேளை புத்தர் நாட்டில் சிவனுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ..இல்லை அவர்களுக்குள் கூட ஒரு ஒப்பந்தம் இருந்திருக்கலாம். அடுத்தவர் நாட்டு இறையாண்மையில் இறைவனாக இருந்தாலும் தலையிடக்கூடாது என்று. கண்ணால் காணக் கிடைக்கிற நம் மந்தைக்கூட்டமே சும்மா இருந்த போது காணக்கிடைக்காதவன் எங்ஙணம்?...சின்னப்பயல் அழைப்பிற்கு இந்த சோமா மட்டும்தான் வர முடியும்....
chinnappayal
அதே சோமனாதனை வரவேற்கவே இந்தக்கவிதை..தடுத்தாட்கொண்டவன் எப்படியாகிலும் வந்துதான் ஆகவேண்டும்.. :-( ,,, பிழைப்பற்றுப்போயி இப்டி கூவி வராத ஒருவனைப்பாடி அழைக்குமாறு செய்த இவர்களை என்ன செய்வது ?! சொல்லுங்கள் சோமா..!
கடலூர் சித்தன். ஆர்
ஹி .. ஹி .. ஹி சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

"இந்துத்துவா என்பதே ஒருவகையான ஒடுக்கு முறைதானே? பிறவியிலேயே கோடானு கோடி மக்களை இழி ஜாதி என்று முத்திரை குத்துவது சிந்தனை ரீதியான ஒருவகை ஒடுக்குமுறையும் , வன்முறையும் அல்லவா!"

(//வைசூரி அய்யர் (16:24:03) :-http://mathimaran.wordpress.com/2012/03/11/514-1/ )

தாராளமா பூசை பண்ணுங்கோ. ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது,

கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..//

ஹி … ஹி .. ஹி …சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

“பரம்பொருளை வழக்காடு மன்றத்தில் காணும் பெரியவாள்,

பேரின்பத்தை தொலைக் கேமராவில் தேடும் தேவநாதன்,

தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,

அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்” -

இவர்களுக்கு ஆதிபராசக்தி என்ன கொடுப்பார் ??? .

பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது

உருவாக்கியவனுக் கு உண்டாக்கியன் தீட்டா???
கடலூர் சித்தன்.ஆர்
சாதி என்ன என்பதை கூறத் தயங்க வேண்டாம்: கி.வீரமணி -தினமணி
//வளரத் திணறிய சிங்களன் தனக்கு இட ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டதை ஈழத் தமிழர்கள் எதிர்த்தனர். அப்போது அந்த இட ஒதுக்கீட்டை அநீதி, அநியாயம்னு சொல்லி நீங்க எதிர்த்தீங்க. இப்போ அதே இட ஒதுக்கீடு 100 % வரை இங்கே இந்தியாவில் கட்டாயம் வேண்டும்னு சொல்றீங்க. ஏன் ஊருக்கு ஒரு கொள்கை முரண்பாடு?? எல்லாம் பிழைக்கும் வழிதானோ? y குயில் 4/25/2012 8:04:00 AM //

//ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொதுஇடத்தில் கூடுகின்றனர்;
அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?
அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங் க சாமி.
நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.//

“ கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.”

ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.??? கூபு / ஏசுபாபு/ குயிலுக்கு உள்ள உரிமை கடலூர் சித்தனுக்கும்
கிடைக்குமா??? வாழ்க பத்திரிகை தர்மம்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=587353&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.