தலையில் ஒன்றிரண்டு நரைமுடி..

முகத்தில் ஒரு வித மூப்பு...

மனதில் எப்போதும் ஏதோவோர் ஏக்கம்....

நகரத்துத் தரகர் வீட்டுத்

தகரப் படலைக்கும்

கிராமத்து எங்கள் வீட்டு

திண்ணைப் படிக்குமாய்

நடந்து நடந்தே தேய்ந்து போனது-என்

பெற்றோரின் பாதங்கள்.

என் சமூக அமைப்பில்

கிராமத்து ஏழைத்

தமிழச்சி நான்

நாற்பது கடந்தும்

அங்கங்கு நரைவிழுந்தும்

காப்பேதும் இல்லா

கலைக்கோயிலாய் -இன்னும்

யாரோ ஓர் மீட்பனின் வருகையை

எதிர்பார்த்தபடி.....

Comments

2 comments

2
சோமா
ஒரு காலத்தில் முதிர்கன்னிகள் என்று சொல்லுவதற்கு வரதட்சனை ஒரு காரணமாய் ஒருந்தது. இன்று அலுவலகம் தோறும் நான் காண்கின்ற முதிர்கன்னியருக்கு வரதட்சணை ஒரு காரணமாய் இல்லை. அவர்களின் எதிர்பார்ப்புகளும் குடும்பத்திற்குள் சிக்கிவிடாத ஒரு சுதந்திர உணர்வும்தான்....கவிதை வரிகள் நன்று.
Kaarunyan, Palladam
நண்பர் சோமா நன்று சொன்னார். குடும்பத்துக்குள் சிக்கி விடாத சுதந்திர உணர்வு.. இன்னும் ஒன்று இந்த தரகர்கள்..............!பதம் பார்க்க வைக்கப்படும் பற்களாய்.............பணத்திற்காக அனேக பெண்களின் வாழ்க்கையில் தோஷஙகளின் துணை கொண்டு......பெற்றோர்களின் வாழ்க்கையொடும் விளையாடி....!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.