கொடியில் கிடந்த
துணிகளில்
எச்சமிடும் காக்கைகள்
அறிவதில்லை
அது யாருடைய
உள்ளாடையென்று
பிணமாகக் கிடக்கும்
தாயின்
முலையைத் தேடும் குழந்தை
சிலைகளெல்லாம்
ஏன் உயிர்ப்பலி கேட்கிறது
பாதாள அறைகளில்
பொக்கிஷங்கள்
கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொள்ளும்
ஏழை விவசாயிகள்
வெள்ளை உடைகளில்
ஒளிந்திருக்கிறார்கள்
ஊழல் கறை
படிந்தவர்கள்
காந்தி தேசத்தில் தான்
துப்பாக்கிச் சத்தம்
அதிகமாய்க் கேட்கிறது.
அதிகாரம் இருக்கின்ற தருணங்களை நீட்டித்துக் கொள்ளவே எந்தக் கொம்பனும் விரும்புவான். அதனாலேயேதான் அந்த காந்தியும் அதிகார
போதையைக் காங்கிரஸ் சுவிக்கக் கூடாதென்றார். நாமும் அந்த ஆசனத்தில் அமர்ந்து பார்த்தால்தான் தெரியும் நம் கோரக்குணம். காந்தியைப் போல நாமும் அமைதியாக இருந்து விடுவதுதான் நல்லது.
போதையைக் காங்கிரஸ் சுவிக்கக் கூடாதென்றார். நாமும் அந்த ஆசனத்தில் அமர்ந்து பார்த்தால்தான் தெரியும் நம் கோரக்குணம். காந்தியைப் போல நாமும் அமைதியாக இருந்து விடுவதுதான் நல்லது.