நீ ஏன் அத்தனை இறுக்கத்துடன் பற்றிக் கொள்கிறாய்

நிறம் நிறமாய் உதிர்ந்து போகும் வாய்ப்புள்ள
ஒரு தொடர்பை

இரவைப் பூசிக் கொண்டே விடை தரும்
சொற்ப வெளிச்சத்தை

அறைச் சுவரில் இடையறாது
அசையும் புகைப்பட நிழலை

நடைபாதை ஈரத்தில் மிச்சமாகித் தேங்கிவிடும்
ஓர் எதிர்பாரா மழையின் அவசரத்தை

நிகழ்தல் என்பதின் ஆழத்தில்
மெல்ல இறங்க நேரும் அசௌகரியத்தை

கசந்து வெளியேறும் அர்த்தங்களின்
நீண்ட மொழிபெயர்ப்பை

அத்தனை இறுக்கத்துடன் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கொண்டு
விஷமேறும் பாசாங்குகளின் முகமூடிகளோடு
எந்த மேடையில் ஒளிந்து கொள்வாய்

--இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
சோமா
நிகழ்தல் என்பதின் ஆழத்தில்
மெல்ல இறங்க நேரும் அசௌகரியத்தை.....ஆழமான வரிகள்..எங்கிருந்து கோர்க்கிறீர்கள் வார்த்தைகளை...
இளங்கோ
*
@ சோமா

வாழ்வின் இடையறா சாரத்திலிருந்து அதுவாகவே கசிந்து வெளிப்பட்டுவிடும் என நினைக்கிறேன்..

ஆனால் மொழியின் வழியே அது நிகழ்கிறது..

நன்றி..!

****

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.