அதிவேக பேருந்தின்
முன்னால் பறந்து சென்ற
சொற்கள் எல்லாம் உள்வந்து
விழுந்தன,
மெசேஜ் சென்டிங் பெயில்டு
காலையில் கூட்டும்போது
செத்துக்கிடந்தன இனிய இரவுகளும்
சில முத்தங்களும்.
துடித்துக்கொண்டிருந்தன
சில வருத்தங்கள் மட்டும்.

உனக்கான என் கனவுகள்

எழுத ஏதுமற்ற பொழுதுகளில்
இருக்கவே இருக்கிறது
உனக்கான என் கனவுகள்
கவிதை பிடிக்கும் என்றாய்
காதல் பிடிக்கும் என்றாய்
என்னை பிடிக்கும் என்றாய்
மூன்றையும் கொடுக்க
விழைந்த கணத்தில்
ப்ச்என்ற உன் ஒற்றை சலிப்பில்
மூச்சுமுட்டிய மௌனத்திற்குப் பிறகு
உடைந்த பனிக்குடமாய்
நம் காலடியில் சிதறிப்போயின
நம் கனவுகள்
சட்டென விலகி நின்றாய் நீ
இன்னும் காயாத ஈரத்துடன்
என் காலடியில் அப்பிகிடக்கின்றன
உனக்கான என் கனவுகள்

- ஜனா.கே

 

Comments

1 comment

1
Guna
Very Nice Boss !!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.