நான்கு எண்ணி உள்மூச்சும்
மூன்று எண்ணி வெளிமூச்சும்
யோகா செய்தாகி விட்டது
உலரவில்லை ரணம்

வருடுகிற இசையும், வண்ணமிகு புகைப்படங்களுடன்
யூ-டியுப்பில் 'அமைதி' குறியீட்டு
இசை தொகுப்புகள் யாவும்
கேட்டும் பார்த்தாகி விட்டது ..

ஆத்மாக்களில் பேதமில்லை
நல்லது கெட்டதென தனித்தில்லை -
கேட்கிற வரை ஒப்புதலாயிருந்தது
வடுக்களை கீறுகிற நிகழ்வுகளில்
விண்ணென தெறிக்கிறது மீண்டும்..

கர்ம வினையாகி துரத்தாமல் இருக்க
மன்னிக்க வேண்டுமாம் வஞ்சித்தவர்களையே!!
சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகும்
சிலுவையை சுமக்க சொல்வதென்ன..

புரிதலில் வருகிற மன்னிப்பை
விடாமல் பிடிக்கத் துரத்துவதில்
மண்டி கருகுகின்றன நொடிகள்

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
chinnappayal
அருமையான வரிகள், துயரத்தைச்சொல்ல இனியும் வேறு
சொற்களோ பதங்களோ இல்லை..

//சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகும்
சிலுவையை சுமக்க சொல்வதென்ன..///
ஜோ.தமிழ்ச்செல்வன்
நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் செத்தார் என போதகர்கள் ஆலயத்தில் போதிக்கிறார்கள். என்னுடைய பாவத்திற்காகத்தான் அவர் செத்தார் என்றால் நான் இன்னும் ஏன் சாகவேண்டும்? சிலுவையை சுமக்க வேண்டும். ஆலயத்தில் போதகர்கள் போதிக்கிறார்கள். மன்னிக்கவும். ஆலயத்தில் போதகர்கள் புலம்புகிறார்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.