வெட்கத்தின் கண்கள்
கூசிச் சிணுங்க
ஆடை களைந்து
உடலசைக்கிறது மூங்கில்

இரவு தாவி அணைக்க
சிலிர்க்கிறது மேனி
மருதாணி பூசிய மனது
இடையறாது இசைக்கிறது
இனிய கானம் 

ஓவியம் தீட்டுகிறது தூரிகை
மேனியெங்கும்
வளைந்து நெளிந்து
சிலிர்த்து பாய்கிறது 
மாற்று நிறத்தில் உடற்பானம்

கூந்தல் கோதி
காதுமடலோரம்
வசியமொழி இசைக்கும்
தூரிகைக்கிசைந்து
வளைந்தாடுகிறது மூங்கில் 

துளிதுளியாய்
மூங்கிலினுள்ளே நிரப்புது
தூரிகை
பூவில் பிழிந்த சாறதனை

நிரம்பிவழியும்
மூங்கில் வழியே
வெடித்துச் சிரிக்குது
மகரந்த மொட்டுகள்!!! 

Comments

2 comments

2
jiferal
அழகியல் நிறைந்ததொரு படைப்பாக்கம். அண்மையில் கீற்றுவில் இணைந்துகொண்ட உங்களின் கவிதைகள் தரமானவை. மேலும் தரமான கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
Wasutha
அற்புதம்! மொழி அருமையாக இந்தக் கவிதையில் கையாளப்பட்டுள்ளது. ஆழமான அர்த்தம் பொதிந்ததொரு கவிதை. கவிதைக்குரிய எல்லாப் பண்புகளுடனும் மொழியை தன்னிஸ்ட்டத்திற்கு வளைத்து அற்புதம் புரிந்துள்ளார் படைபாளி. உளம்கனிந்த வாழ்த்துக்கள்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.