முதுகேறிக் கனக்கிறது உன் அதிகாரம்
கீறிவிட்ட நீர் உணர்வுத்தடத்தில்
புள்ளியிட்டு மிதக்கிறது பொய்யெனும் காடு

பேரண்டம் ஆளும் குற்றத்திலிருந்து
தக்கெனப் பிரிகின்றன தவறுகள்

குற்றங்கள் பெருமதிப்பு வாய்ந்தனவாகிக்
கடைசி அரண்களைக் கடந்தேகிப்போக
பொய்களின் மீது நிம்மதியாக நீ உறங்கிப்போனாய்

கருங்குதிரையில் விரைப்பென அமர்ந்து
ஆதிப்பேரரசனாகி வலம் வருகிறேன் லயத்துள்

ஏதோ ஓர் தருணத்தில்
நினைவு என்னைக் கொல்கிறது

பழுப்பு மஞ்சள் பொழுதொன்றைப் பரிசளிக்கிறேன்
குற்றங்கள் பெருமதிப்பு வாய்ந்தனவோ என்று சொல்லுங்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.