1.தூறல்:
......................
எப்போது திருமணம்
எனக்கேட்கிறார்கள்.
வரன் பார்த்துக்கொண்டிருப்பதாய்
வீட்டார் சொல்கிறார்கள்.
நம் ரகசியத் திருமணம்.
நெஞ்சில் கனமாய் பயமாய்.

2.இடி
..........................
"நம்ம சாதியில் உனக்கு
ஆம்பளையே கிடைக்கலியா.,,.?"
கேட்கிறார் அப்பா.
ஆண்கள் கிடைப்பார்கள்.
அவன் கிடைப்பானா..?

3.மின்னல்
............................................
கண்ணில் படும் இடத்தில்
கடிதத்தை வைக்கிறேன்.
கண்காணா இடத்துக்குக்
கிளம்பிய பொழுதில்.

4.அடைமழை
....................................................
நான் இறந்துவிட்டதாக
எல்லோரிடமும் உரக்கச்சொல்கிற
அம்மா
மனசுக்குள்
தீர்க்காயுசு இருக்கவேண்டுமென
வேண்டியும் கொள்கிறாள்.

5.வாடை
...........................................................
யாரையோ பார்க்க வந்ததாய்ப்
பொய் சொல்கிறாள் அம்மா.
வாசலில் நின்றுகொண்டு
வேறுபுறம் பார்க்கிறார்
அப்பா.
ரெண்டு பேரின் கண்களும்
தேடுவது
தூளியில் தூங்குகிறது.

Comments

2 comments

2
வ.க.கன்னியப்பன்
திரு.ஆத்மார்த்தி, உங்கள் 'காதல் - கடிமணம் - மழை' அருமையான பொருள் பொதிந்தது.

"நம்ம சாதியில் உனக்கு ஆம்பளையே கிடைக்கலியா.,,.?" என்ற கேள்வி நியாயமானது.

இதன் பாதிப்பாக என் கவிதை 'நாதியில்லை என்ற நினைப்புத்தானே !!!' www.eluthu.com ல் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பிள்ளைகளின் மனமும், பெற்றவர்களின் நிலையம் இதுதான்.

வ.க.கன்னியப்பன் ([email protected])
ஜெயபால்
உண்மையிலேயே நெஞ்சை நெகிழ வைக்கிறது.
யதார்த்த வாழ்வை கவித்துவத்துடன்
பதிவு செய்துள்ளவிதம் அருமை.
இது போன்ற கவிதைகளில் தான்
வாழ்வின் இன்பம் கொட்டிக்கிடக்கிறது.
அன்புடன் ஜெயபால்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.