அப்பா யாரென்று தெரியாமல்
பிறப்பு.
உடன்பிறப்புகள்
ஆறோ ஏழோ.
சகோதரர்களைக் கூட்டிச் சென்றனர்
செல்வந்தர்கள்.
அம்மா விலக்கியதால்
கால்போன போக்கில்
உணவு கிடைத்த வழியில்
சென்றனர் சகோதரிகள்.
ஒன்று மட்டும் வீதியில்
மிச்சமிருந்தது.
மனமிருந்து யாராவது போட்டால்
பசியாறும்.
பெண்ணாக இருந்தாலும்
இரவு காவலுக்கு கெட்டி.
குரைக்கும் சப்தம்
குறைக்கும் நிம்மதியை.
கண்டு கொண்டாலும் கொள்ளாவிட்டாலும்
காக்காமலிருப்பதில்லை காவல்.
வீதியிலேதான் வாசம்.
வீட்டுக்குள் விடுவதில்லை யாரும்.
என்ன இருந்தாலும் ஆகாது
நாய் பிழைப்பு.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.