தொலைவிலிருந்து கேட்கும்
உன் அழைப்பின்
வாசம் உணர்கிறேன்
அருகாமை நெருங்கி

கழிந்த இரவின்
கடந்த வேகத்தின்
ஒலி சிதறல்களை
பொறுக்க முற்பட்டு
தோற்றுவிட்டேன்

இருள் காட்சிகள் மட்டும்
இமைக்குள்ளான நாடாவில்
பதிவாயிருக்கும்

உடனிருக்கும் கைக்கோலின்
அழை மணியை
பழுது நீக்கிக்கொள்
என்றுமே நலமோடிருக்கும்
கப்பிய இருளையும்
உடனிருக்கச்சொல்

தேநீர் கோப்பை நிறைய
தீங்கிளைத்த சங்கடங்களை ஊற்றி
ஜோல்னா பைக்குள் பதுக்கி வை

விளையாத நம்பிக்கையோடு
நானும் உன்னை
நெருங்கி விட்டேன்
நீண்ட நாட்களுக்கு பின்

தட்டில் விழுந்த
மோர் சோற்றில்
உன்னுள் திருடிய
தியாகம் குழைத்து
வைத்திருக்கிறேன்
என் மனசின் சாட்சியை
ஊறுகாயாய் தொட்டுக்கொள்

காசொலிகள் மட்டுமே
கவனமில்லை
பார்க்க, கேட்க, உணர முடியாத
ரூபாய் நோட்டுகளில்
எழுதப்பட்டிருக்கும்
நம் இருவரின்
கருப்பு கையெழுத்து

ரெட்டை நொங்கு நீக்கிய
பனக்காய்களாய்
நெகிழும் கண்களில்லா பிழைப்பின்
துணையின் திடத்தை
ஊடகமாக்கி
தெருவோரம் ஒட்டி செல்ல
வண்டி தயாரிக்கலாம்

சத்தியத்தை முன்னிறுத்தி
கொட்டாங் குச்சியின் துணையோடு
நெடுந்தொலைவு வரை
மனக் காட்சிகளின் பாதையில்
இருள் வண்டி
ஓட்டிக் கொண்டிருக்கலாம் .

ஓடி வராதே!
ஒட்டியுள்ள கருந்திரை
உடனிருக்கட்டும்.

-  கொ.மா.கோ.இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 9940382535)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.