ஆட்சித் தலைவரைத் தெரிவு செய்ய
மாட்சிமை மக்களுக்கு இலவசப் பரிசுகள்
பசித்த அலுவலர்க்கு இலஞ்சப் பணமும்
மசியா தவர்க்கு உயர்நிலை மறுத்தலும்
சுரண்டல் ஆட்சியை நிலைத்திட வைக்கும்
மிரளா இந்தியர் அறனிது தானோ?
 
(ஆட்சித் தலைவர்களைத் தேர்வு செய்வதற்காக மாட்சிமை பொருந்திய மக்களுக்கு இலவசப் பரிசுகள் (அளிக்கப்படுகின்றன). அளவுக்கு அதிகமான ஆசை கொண்ட அரசு அலுவலர்களுக்கு இலஞ்சப் பணம் கிடைப்பதன் மூலமும், (அவ்வாறு இலஞ்சத்திற்கு) மசியாதவர்களுக்கு உயர்நிலைப் பதவிகளை மறுப்பதன் மூலமும், சுரண்டல் ஆட்சியை நிலைத்திட வைக்க (உலகில் எங்கு மாற்றம் நடந்தாலும் புண்ணிய பூமியான பாரதத்தில் மட்டும் மாற்றம் நிகழாது என்று) மிரளாமல் (உறுதியாக) இருக்கும் இந்தியர்களின் அறன் இது தானோ?

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.