முகம் காட்டியும்
காட்டாமலும்
ஒரு முகமாத்து
பொதுவெளியில்
 
எதெதெல்லாமோ
அன்பளிப்பு ...
அம்மா அப்பா கூட
கிடைக்கலாம்..
 
படுத்துக் கொண்டும்
அமர்ந்து கொண்டும்
ஜெயிக்கலாம்
எங்கு நின்றாலும்
 
நிற்பவர்களை
அமர விடாமலும்
யோசிக்க விடாமலும்
செய்யலாம் இலவசத்தால்..
 
உபயப் பட்டயம்
எழுதாமல்
தொலைக்காட்சியும்
கணனியும்
சிந்திக்கும் திறனழித்து
 
நெற்றிக்குப் பதிலாய்
ஆள்காட்டிவிரலில்
கறுப்பு நாமம்
யார் யார் நாமத்தாலோ
வாழ்கவென்று சொல்லி
 
அடுத்த நாற்காலி
நமக்குத்தான்
அதுவரை ஆற அமர
செலவு செய்து விட்டு
ஓய்வெடுப்போம்  சுழற்சிக்காய்..

Pin It