எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..
 
பெயரெழுதிய
சோறைப்போல
தனக்கானதை மட்டும்
உண்ணும்
ஒழுக்கம் வளரட்டும்..
 
எல்லா தேவதையும்
சிறகடித்து
கண்முன்னே
பறந்து கொண்டிருக்கலாம்
தன் சுய தேவதையோடு
கை கோர்த்து..
 
தேவதைகளின்
தரிசனத்தில்
தனக்கான ப்ரத்யேக
தேவதையைத்
தொலைத்துவிட்டு
 
இன்னொன்றைத்
தேடித்  தொடர்ந்து
தூக்கமும் கனவுமற்று
விழித்தே இறக்காமல்
 
விழிப்புற்று
கிடைத்ததே வரம்தானென
தன் தேவதையின்
இறகு பிடித்து
மறைந்து கொள்ளலாம்
அல்லது பறந்து
அதனோடு களிக்கலாம்..

Comments

1 comment

1
வேடியப்பன்
அருமையான கவிதை அக்கா. மிகவும் ஆழ்ந்த அறிவோடு எழுதுகிறீர்கள். // தேவதைகளின்
தரிசனத்தில்
தனக்கான ப்ரத்யேக
தேவதையைத்
தொலைத்துவிட்டு

இன்னொன்றைத்
தேடித் தொடர்ந்து
தூக்கமும் கனவுமற்று
விழித்தே இறக்காமல்// என்ற வரிகள் ஏதோ ஒரு ஒழுக்கத்தை போதிப்படுஹ் போல உள்ளது. நன்றி! வாழ்த்துக்கள்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.