நீ
பதுங்கிவர தேவையில்லை
வாசல் கதவுவழியாகவே வரலாம்
உன்னை யாரும் கேள்வி கேட்கபோவதில்லை
சர்வாதிகாரம்,ஜனநாயகம்,கம்யூனிசம்
இன்னும் எத்தனை எத்தனையோ
அத்தனையின் பெயராலும்
நீ
உள்ளே வரலாம்.

இங்கே வெறும்
எழும்புகளும் மிச்சத்தின் எச்சங்களும்தானிருக்கிறது
இரத்தவாடையில் கரைந்துபோன
சுவர்களிலிருந்து எழும்
கூக்குரல்கள் கேட்டு பயப்படவேண்டாம்
அது உன் முன்னோர்கள்
பார்த்தும் களித்தும் ரசித்தும் உருவாக்கியது
நீயும் அவர்களைப்போலவே
பார்த்து ரசித்து களித்து செல்லலாம்.

அடிமைகள் எல்லா காலமும் இருக்கிறார்கள்
உன் காலத்திலும் இருப்பார்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.