விரைந்து போகும்
ரயில் வண்டியை
ரசிக்கத் தொடங்கியது தான்
ஆரம்பம்
அரிதாக செல்லும்
ஆகாய விமானம் பின்னே
ஓடுவதில் அலாதிப் ப்ரியம்
கருப்பசாமி கோயில்
கடா வெட்டில்
சாமியின் ஆகிருதியை
அண்ணாந்து பார்ப்பதில்
ஒரு குதூகலம்
அரவம் கண்ட
போதெல்லாம்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
கற்றுக் கொடுத்த
அங்கையற்கண்ணி அக்கா
மேல் தொடரும் நேசம்
அலை ஒதுக்கித்தள்ளும்
ஒன்றுக்கும் உதவாத
பொருட்களை பொறுக்குவதில்
நண்பர்களிடையே
போட்டா போட்டி
எப்போது பார்க்க நேர்ந்தாலும்
கண்ணாலம் கட்டிக்கிறியா என்னை
என்று கேட்டு
கன்னம் சிவக்க வைக்கும்
பாட்டி
கனவில் வேறு வந்து தொலைக்கும்
தென்னந் தோப்பையே
சுற்றிக் கொண்டு திரிந்தால்
தேறமாட்ட என்று சொல்லி
பட்டணத்துக்கு பஸ் ஏற்றி
அனுப்பி வைத்த
சொந்த பந்தங்களை
என்னவென்று சொல்ல.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.