சாரல் மழை

வீதியெங்கும் வெள்ளக்காடு

தூறல் விட்டுப் போனால்

துவங்கிவிடும் இயல்பு நிலை

தண்ணீர் அடித்துச் செல்லும்

தெருவின் குப்பைகளை

தேங்கிய தண்ணீரில்

கொசுக்கள் முட்டையிடும்

ஒவ்வொரு நீர்த்துளியும்

சமுத்திரத்தை நோக்கி

ஓடிச் சலிக்கும்

கார்மேகம் கண்டு ஆடும்

மயில் போல

மழைக்கால விடுமுறைகள்

மாணவர்களுக்கு அமைந்திடும்

முன்னெச்சரிக்கையாக

குடை எடுத்து சென்றவர்களுக்கு

திடீர் மழையால்

எந்த எரிச்சலுமில்லை

நனைந்தோடும் கூட்டம்

குடையில் செல்பவரை

கண்டு கண நேரம்

மனம் குமையும்

வானம் பார்த்த பூமி

மாரிக்காக ஏங்கியழும்

மழை பெய்யும் சமயம்

ச்சோவென ஆர்ப்பரித்து

நிலம் தனது ஆனந்தத்தை

வெளிக்காட்டி மகிழும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.