பெரியார் என்றால்!

இன்னும் சிறிதளவே மிச்சம் இருக்கிறது வாழ்க்கை
என்ற பொழுது நெஞ்சில் ஒரு சொட்டு விழுந்தது - பெரியார்!

ஆதிக்கக் கோடரிகளால்
எம் அங்கங்களை பிளந்த பொழுது
தன்மான கவசம் கொண்டு
எம் இன உயிர் நிலைகளைக் காத்தாய்!

சாதி மத வல்லூறுகள்
எம் வாழ்க்கையைப் பிறாண்டிய பொழுது
உன் பகுத்தறிவு கிடுக்கியால் அதன்
கூரிய நகங்களைப் பிடுங்கி எறிந்தாய்!
இன்னும் உன்னை இப்படிச் சொல்வேன்........

பெரியார் என்றால் நேயமும் நலமும்
பெரியார் என்றால் வாழ்வும் வளமும்
பெரியார் என்றால் அறிதலும் அவாவுதலும்
பெரியார் என்றால் விழிப்பும் வேட்பும்
பெரியார் என்றால் மீட்பும் உயிர்ப்பும்
பெரியார் என்றால் அடக்கமும் ஆற்றலும்
பெரியார் என்றால் பணிதலும் நாணலும்
பெரியார் என்றால் உண்மையும் நேர்மையும்
பெரியார் என்றால் திருத்தமும் மாற்றமும்
பெரியார் என்றால் சீரும் செம்மையும்
பெரியார் என்றால் சிக்கனமும் பயன்பெருக்கும்
பெரியார் என்றால் இயற்கையும் இனிமையுமாம்
ஆக   பெரியார் என்றால் பெரும் விழுமியத் தொகுப்பு
ஒரு வாழ்வியல் வியப்பு !!!!!!!!!!!... வாழ்க பெரியார் !  

- செந்தேவன்

Pin It