பிறவியிலேயே நடக்க வராது
அம்மா இல்லாத அழகான ஆனந்திக்கு...
 
அவள் அழ... அழ...
படிப்புக்கும் நடைப் பயிற்சிக்குமெனச் சொல்லி
அப்பா கொண்டு சேர்த்தார் - ஒரு
உண்டு உறைவிடப் பள்ளிக்கு!
 
 ஒரு வருடமாகியும் வராத அப்பா
புது வீடு கட்டிகொண்டிருப்பதாய்ச்
சொல்லிச் சென்றார்
பரிதாபப்பட்டு பார்க்க வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி!
 
அப்பா கட்டிய புதுவீட்டுக்கு
'நடந்து' செல்வதாய்க் கனவு கண்டு
தூங்கிக்கொண்டிருக்கிறாள் ஆனந்தி...
 
கட்டிய புது வீட்டில் 
அடுத்த முதலிரவுக்குத் 
தயாராகிக்கொண்டிருகிறார் ...
அப்பா! 

Comments

4 comments

4
kayal
very nice swathy
Ananthaprakash
thaaymai unarvodu oru kavithai.
arumai!
Nehruji
suvathi madam, all appaakalum padika vendiya super kavithai, thodaradum unkalathu eluthup pani, social neet your kavithikal,wiit regards Nehruji
kusumban
Why to blame appaa? It is our mind set that we expect others to sacrifice their life for our benefit, why not let appaa to live his life, he needs a companion, that we call husband or wife, in our locality, one retired govt employee, lost his wife long back, feeling lonliness, married off his last daughter, then he felt still lonely, finally decided to marry himself with a widow lady without any children, compatible with his age, all his relatives and society botcotted him, no relatives are visiting his house, why he is not allowed to have one companion, not the question of sex, we think of sex if we talk of marriage. When we have no friends, we become desparate, visit temples, religious discourses, still no mental peace.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.