காதல் யுத்தகளத்தில் உன்னையே

பெரும் எதிரியெனக் காண்கிறேன்

போருக்குத் தயாராகு

சமர்த் தரையில் நானொரு

கோழை அரசனைப்போல

உன்னிடம்

மண்டியிட்டுச் சரணடைவேன்

உன்னழகிய நிமிடங்களில்

எதையும் வீணாக்காமல்

என்னிடத்திலிருந்து எல்லாவற்றையும்

அபகரித்துப் பறித்துக்கொள்

உன்னையே எல்லையென

உடலும் மனமும் வட்டமிட்ட

என் சுய இராஜ்ஜியத்தை

வீரக் கதைகள் பேசி

உன் விழிகளைச் சுற்றிவந்த

என் பார்வை மொழிகளை

உன்னுறக்கம் கெடுக்கவென

கணந்தோறும் துடித்ததிர்ந்த

நீயுறங்குமென் இதயப்பஞ்சணையை

இப்படி இன்னுமின்னும்

எல்லாவற்றையும் எடுத்துக்கொள்

போரின் முடிவாக

காதல் அடிமையென

உறுதியான விலங்கிட்டு

என்னையும் இறுதிவரை

உனக்கெனவே எடுத்துக்கொள்

- எம்.ரிஷான் ஷெரீப்

Comments

1 comment

1
anbazhagan
னேசத்துக்குரிய ஒரே காதலுககு...மனதிர்க்குல் என் காதலியின...இருல்நேரத்து இனித்த முத்தம் ...முடியல நன்பா..அவ்வலவு அழகானது காதல்.உஙக வரிகலும் நேசிக்க வைக்கின்ரது....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.