30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மூர்மார்க்கெட் கலகலவென்று இருந்த சமயம். ஒரு நாள்அந்த வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். ஒருவர் அறுந்த பிளாஸ்டிக் செருப்பை ஒட்ட வைக்கும் இரசாயனப் பொடி என்று கூவி விற்றுக் கொண்டிருநதார். அப்பொழுது நான் அணிந்திருந்த பிளாஸ்டிக் செருப்பு அறுந்து இருந்தது. அவா¢டம் அதைக் கொடுத்துச் சரி செய்யச் சொன்னேன். அவரும் தன்கையில் இருந்த இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அந்த இரசாயனப் பெடியில் (!) தோய்த்துச் செருப்பின் அறுந்த பாகத்தை இணைத்துப் பழுக்கக் காய்ச்சிய அதன்மேல் வைத்த உடன் அறுந்த பாகங்கள் ஒட்டிக் கொண்டன. செருப்பு நேரான மகிழ்ச்சியில் அந்த அதிசயப் பொடியை இரண்டு பொட்டலங்கள் வாங்கிக் கொண்டேன், 

 இன்னொருமுறை அதை உபயோகிக்க முனைந்த போது தான் உண்மை பு¡¢ந்தது. பிளாஸ்டிக் செருப்பின் அறுந்த பாகங்களை இணைப்பது இரும்புக் கம்பியில் உள்ள வெப்பமே தவிர அந்த அற்புதப் பொடிக்கு அங்கே எந்த வேலையும் இல்லை என்று. எனக்கு அந்த பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது கோபம் வந்தது, 

 இவரக்ள் எல்லாம் சாதாரண ஏமாற்று வித்தைக்காரர்கள். கெளரவமான வேலையை அனைவருக்கும் தரவேண்டிய அரசு தன் கடமையைச் செய்யாத அயோக்கியத்தனத்தின் விளைவாக, வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயத்தினால் இப்படி ஏமாற்றுவித்தைக்காரர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். ஆனால் இப்பொழுது "யோகா" என்று சொல்லிக் கொண்டு புற்றீசல்களைப் போலப் பெரும் அளவிலானோர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் யாருமே ஏழை மக்களின் வயிறறுப் பசியைப் பற்றிய கவலை இல்லாதவர்கள். இவர்களின் நோக்கமே மக்களை அறிவு மயக்கத்தில் ஆழ்த்தி அவர்கள் சமூக அவலங்களைப் பற்றிய அக்கறை கொள்வதில் இருந்து திசை திருப்புவது தான்.

இவர்கள் உண்மையில் செய்வது என்னவென்றால் உடற்பயிற்சியைக் கற்றுக் கொடுக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் உடல் நலமாக இருக்கும். இதில் மாய மந்திரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த யோகா ஏமாற்றுவித்தைக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் உடற்பயிற்சியின் போது உடல் இருக்க வேண்டிய நிலையை (கடவுளை) வணங்குவது போல இருக்கச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக இரு கைகளை உயர்த்திக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலையில் இவர்கள் கைகளை உயர்த்தி வணங்குவது போல் (கைகூப்பி) இருக்கச் செய்வார்கள்.

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் தேவையின்றித் தனது அற்புதப் பொடியில் இரும்புக் கம்பியைத் தோய்த்தது போல இவர்கள் தேவையின்றி கைகூப்பி வணங்கச் செய்கிறார்கள். இடையிடையே 'ஓம்' என்ற வார்த்தையை உச்சா¢க்கச் செய்கிறார்கள். இவர்களிடம் பயிற்சி பெறுகிறவர்களின் உடல் நலம் தேறுவது கண்டு ஏதோ ஆண்டவனின் சக்தி தான் தங்களைக் காக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள். 

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரரின் அற்புதப் பொடி இல்லாமலேயே அறுந்த செருப்பை ஒட்ட வைக்கமுடியும். அது போலவே யோகா ஏமாற்றுவித்தைக்காரர்களின் ஆன்மீகக் கலவை இல்லாமலேயே உடல் நலம் பெற முடியும். இரும்புக் கம்பியின் வெப்பம் அறுந்த செருப்பை நேர் செய்வது போல யோகாவில் உள்ள உண்மைப் பொருளான உடற்பயிற்சி உடலை நலமாக வைத்துக் கெள்ளும். 

 சரி! யோகா என்று சொல்பவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க ஈஷா 'யோகா' என்ற வகுப்பில் சேர்ந்தேன். முதலில் இங்கு கற்றுக் கொண்டதை வெளியில் சொல்லக் கூடாது என்று உறுதிமொழி கேட்டார்கள். அது ஏன் என்று வினா எழுப்பிய போது சரியான தெளிவான விடை கூற மறுத்துவிட்டார்கள். விவாதம் தொடர்ந்தபோது வகுப்பில் இருந்த பலர், என்னை விவாதம் செய்ய வேண்டாம் என்றும், அதனால் பலருடைய நேரம் வீணாவதாகவும் கூற நான் வகுப்பு முடிந்தபின் கையெழுத்திடுவதாகக் கூறினேன். 

 பின் வகுப்பு தெடங்கியது. ஆசிரியர் முதலில் தான் கூறுவதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதுவரை நாம் பெற்ற அனுபவ அறிவை அகற்றிவிட வேண்டும் என்றும் கூறினார். அதற்குக் காரணமும் கூறினார். ஒரு குவளையில ஏற்கனவே தேனீர் இருந்தால் அதற்கு மேல் ஊற்றப்படும் தேனீரைக் கொள்ளாது என்றும், ஆகவே முதலில் குவளையில் இருக்கும் தேனீரைக் கொட்டிவிட வேண்டும் என்றும், அது போல் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவை நீக்கிவிட்டால் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். 

 உடனே நான் மறுத்தேன். தேனீர்க் குவளையின் கொள்ளளவு வரம்புக்கு உட்பட்டது. மனித மூளையின் கொள்ளளவு வரம்பில்லாதது. ஆகவே ஏற்கனவே இருக்கும் அனுபவ அறிவுடன் புதிதாகப் பெறுவதற்கு மனித மூளைக்குத் திறன் உண்டு. ஆகவே பழைய அறிவை மறைக்கத் தேவையில்லை என்று கூறினேன். மேலும் தேனீரைக் கொட்டிவிடுவது போல அனுபவ அறிவை வெளியேற்றுவது இயலாத ஒன்றாகும் என்பதையும் கூறினேன். என்னடைய விளக்கத்தால் ஆசிரியர் திணறினார் என்பது அவருடைய மழுப்பல்களில் இருந்து வெளிப்பட்டது. அவர் சொல்லும் பாடங்களை நான் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவுடன் சோதித்துப் பார்த்துத்தான் ஏற்கவோ மறுக்கவோ முடியும் என்று சொன்னதை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. 

 எங்கள் விவாதம் தொடர்ந்தது. வகுப்பில் சுமார் நூறு பேர்கள் இருந்தார்கள். எங்களுடைய விவாதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆசிரியர் ஏதோ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கும் வேளையில் நான் தடைக் கல்லாக இருப்பதாக நினைத்தார்கள். உடனே ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தேன். இனி நான் எந்த வினாவையும் எழுப்புவதில்லை என்றும், அமைதியாக என்ன பாடம் நடக்கிறதோ அதைக் கவனித்து விட்டுச் செல்வதாகவும், அதே போல் ஆசிரியரும் என்னுடைய கருத்தைக் கேட்கக் கூடாது என்றும் கூறினேன். 

 ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. நூறு பேர் செல்லும் படகில், ஒருவருக்கு உடல் நலம் இல்லை என்றால் அவரைத் தூக்கி எறிய முடியாது என்றும் முதலில் அவரைக் கவனிப்பது தான் முறையான செயல் என்றும் கூறி, என்னுடைய அனுபவ அறிவை உபயோகிக்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ள வைக்க இயன்ற அளவு முயற்சி செய்தார். அவருடைய இக்கட்டான சூழலையும், வகுப்பில் இருந்தவர்களின் மனோநிலையையும் பார்த்த பின்னர் நான் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். 

 இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் யோகா வகுப்புகளில் உடற்பயிற்சி உண்டு. அதுதான் உண்மையில் மனிதர்களுக்குப் பயன்படுகிறது. கூடவே அவர்கள் செய்ய வைக்கும் தேவையற்ற அசைவுகள் (கை கூப்புவது போல) இது உடற்பயிற்சி என்பதை மறைப்பதற்குத் தான். மேலும் வகுப்பில் உடற்பயிற்சிக்கு 25% நேரம் ஒதுக்கப்படுகிறது. மதிமயக்கப் பிரச்சாரத்திற்கு அதாவது மூளைச் சலவைக்கு 75% நேரம் அளிக்கப்படுகிறது. பகுத்தறிவாளர்கள் அங்கு அமைதியாக அமர்ந்து இருப்பதைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது இருந்த கோபம் நீங்கிவிட்டது. 

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

18 comments

18
venkatesh
யோகா ஒரு உடற் பயிற்சி . அதற்கும் ஆன்மீகத்திற்கு சம்பந்தம் இல்லை, இதை சாதாரண பூங்கா மற்றும் சிலர் இலவசமாக கூட யோகா கற்று தருகிறார்கள்,
யோகா பயிற்சி தவறானது அல்ல, ஆனால் அதை பல இயக்கங்கள் ஆன்மீகத்துடன் கலந்து ஏதோ தாங்கள் தான் யோகாவை கண்டுபிடித்தது போல் கூறி பல ஆயிரம் ரூபாயையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்,
இப்படி பட்ட இயக்கங்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,

சுய அனுபவத்தை வெளியேற்றிட வேண்டும் என்கிறார்கள் என்று கூறினார், அப்படி சுய அனுபவத்தின் விளைவாக தான் இஷா யோகா மையத்தை அவர் தோற்றுவித்தார்,
பிறகு எப்படி மற்றவர்கள் மட்டும் சுயமாக சிந்திக்க கூடாது என்று கூற முடியும்,
மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன், அதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அதை இந்த இயக்கங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன,
மக்கள் மனிதர் பின்னால் செல்வதை விட கோயிலில் உள்ளச் கடவுளை சிலையை வணங்கலாம், அது மேல்
அதை விடுத்து மனிதனை தெய்வமாக எண்ணி அவன் பின்னாடி செல்வது தீமையில் தான் கொண்டு போய்விடும்,
suriyaprakash
iyya nenkal kuriyathu pol ellam thavaru endra kannodam ellam thavaru andru than mudium .conjam sinthiunkal unmai unkaluku tharieum
P. VENKATALAKSHMI
Iam also a meditaor in Isha yoga you have missed a wonderful experince due to your ego problem. when we are ready to learn one thing we must obey oru teacher's word or other wise we couldn't learn any thing. The loss is not for the Isha or the teacher for you only. Yoga is not only a exercise but it more than that it is a experince I coudn't explain to you. You must do this and learn the experience then you will realise its truth. My advise is continue your cleass for 7 days experience it and if not satisfied with that then you tell your opinion .
raj
Dear இராமியா,

you are absoultely wrong... U didnot understand what is isha is about...

You are a type of person who will not accept anything in life....

Leave it .. Loss is for u only...
s.palanikumar
hi eramya,

in your life u dont hear any ones words, first you should lisen and apply your life , then only u will know what is that,,,,
selva
Hi eramya nenga class ku ullayae pogala nengalam class a pathi pesarengala apadi irundhum teacher ungala particular a care panni pesi irukaru ana pagutharivalar apadinkara perla nenga unarndhathai nengalae vachikonga net la write panni mathavanga nambikaiya kedukathenga , ungaluku theriyuma kaiya mela thooki kadavulai vananga vaikiranganu patha madiri pesaringa ulla yenna nadakuthunu theriyama ipadithan appadinu karpanai panni publish pannirukinga yena porutha varai nenga than yematrukarar isha yoga illa first you be right yenna sola varanganu therinjukamalae yeluthara nenga nichiyama pagutharivalar illa pagutharivalar porvaila irukira oru egoistic charecter
S.Hemanth
hi eramya nenga plastic serupu vithai karan kitta aemarama irukkanumna isha yoga classla yoga panunga. pannama ipadi thappa pesathinga.
baburaj
dear anna, you have mist a great experience in your life...
srinivasan
யோகாவும் ஏமாற்று வித்தையும், this website ban pannavum, this website ban pannavum,
Priyadharshini
நமஷ்காரம்:
யோகா என்பது உடர்பயிர்சி இல்லை இந்த கலாசாரம் முக்திக்கான பாதையை பல வழிகலில் மக்கலுக்கு கொடுத்துல்லது அதில் இன்ரியமையாதது யோகா. அத்தகு யோகாவை இன்ரைக்கு இஷா வை விட வேரெந்த யோக மையமும் சத்குருவை விட வேரு எவராலும் தரமுடியாது. வாழ்வை அர்த்தப்படுத்திக்கொல்ல இஷாவுக்கு வாருன்கல் இஷா உஙகலை அன்புடன் வரவேர்க்கிரது
kuppusamy
ஈஷா யோகா ஒரு ஏமாற்று அமைப்பே. ம்க்கள் ஏமாறும் வரை ஏமாற்றுவார். உண்மை வெளிப்பட்டால் வெளிநாட்டிற்கு ஒடி விடுவார். இதில் சந்தேகமே இல்லை. பெரியார் மண்ணில் அவ்ல்ம். அயோக்கியத்தனம்
Babu
You are absoluetly right mr.Ramea about your questioniong (or intend to ask questions) but you should understood that when you go to movie theatre you should experience/enjoy the movie, if you stand up and ask question during movie is playing then everybody will look you as you need to go to psychiatrist !!!
mazhairam
oruvarathu unarvukalai kattupaduthuvathu.. avarkalin urimayai parippathaku samam...satharana entha manithanum ethai anumathikka mattan. matrum neengal ungalai kaiyala theriya vittal neengal... manithane illai.. nandri.. plz drive urself..
suresh
Dear nengal sollvathu romba. Thavaru. Yoga enbathu romba pazamayana ooru udarpairchi.sathguru avargalidam irukum oru unnadhthamana. ananthathai matravarglum anupavikatum endru padupadulirar.nenngal oru 100000 rupai kidaithau endral matravargalum anupavikatum endru kodupirgala? Sathguru ataithan seigirar.
R.Baskaran
At first you listen what they told in isha yoga class. and then you may
critisise. money is not a matter, your health is important. if you learn yoga then your health will definetly improve.
Guest
சகோதராய் முழுமையாக தெரியாமல் சொல்ல வேண்டாம்
யோகா யென்பது உடர் பயிற்சி அல்ல
p.thanigaivelan
சத்குரு ஜக்கி வாசுதேவ்
பெரியார் கடவுள் மறுப்பு மட்டுமே செய்தார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனமோ அதைவிடவும் பெரிய மடத்தனம் அவரது கடவுள் மறுப்பை மட்டும் விட்டுவிட்டு பிற கொள்கைகளை ஆதரிக்கிறோம் என்று சொல்வதும். வசதியாக சில ஆன்மீகவாதிகள் இவ்வாறு சொல்வதுண்டு. நாம் அவ்வாறு அல்லாமல் பெரியாரை முழுதும் தொழுகிறோம். கடவுளுக்கே நாம் அவ்வளவுதான் மதிப்புத் தருகிறோம் எனும் போது இந்த ஆன்மீகவாதிகளுக்கு என்ன மரியாதை தரப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆன்மீகப்போர்வையிலே மக்களின் அறியாமையை போற்றிப் பாதுகாத்து தன்னம்பிக்கையை துளிர்விடாது செய்யும் அயோக்கியத்தனத்தையே பலரும் செய்துவரும் வேளையில் எப்போதாவது அரிதாக சில மனிதர்களையும் நாம் பார்க்க நேர்கிறது.

திரு. ஜக்கி வாசுதேவையும் நான் அவ்வாறே காண்கிறேன். அவரின் அழகழகான கருத்துக்களை ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற விகடன் வெளியீட்டுப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆய்ந்தறிந்த ஈஷா யோகா கலையைப்பற்றிய ஒரு விளம்பர சிடி இப்போது எல்லா பிரபல புத்தகக்கடைகளிலும் விகடன் மற்றும் நய்ஹா உபயத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

துள்ளலான இசையோடும் கவிதைத்தனமான காட்சிகளோடும் ஆரம்பிக்கும் அந்த சிடியில் ஆரம்பக்காட்சிகள் நிறைவடைந்து ஜக்கியின் பேட்டி துவங்குகிறது.. ‘தனியொரு மனிதன்’ என்பதை ‘ப்ரத்யொரு மனிதன்’ என்றும் ‘தொழில்நுட்பம்’ என்பதை தொழிர்நுற்பம்’ என்றும் கூறும் அவரது கொஞ்சும் தமிழ் நம்மை கவர்கிறது. அற்புதமான மயக்கும் குரலில்,

ஜனனம் சகதம்..
மரணம் கருணம்..

என்ற ஸ்லோகத்தோடு (எனக்குப் புரியவில்லை) துவங்கி பேட்டியை இவ்வாறு ஆரம்பிக்கிறார்,

“ நாம் எப்போ ஒரு மனிதனா பிறந்தோம்.. அப்பவே நமக்கு ஒரு பிரச்சினை வந்துடுச்சு.. நாம மற்ற ம்ருகங்கள் மாதி வந்திருந்தா நமக்கு சாப்பாடு, இனப்பெருக்க செயலு இது ரெண்டு நடந்தா வாழ்க்கை முடிஞ்ச மாதிரி இருக்கும். எப்போ மனிதனா வந்துட்டோமோ ஒரு பிரச்சினை.. வயிறு. வயிறு காலியா இருந்தா.. சாப்பாடு. வயிறு புல்லாயிருச்சுன்னா.. நூறு பிரச்சினை.. நமக்கு.! ”

முதல் முறையாக கேட்கும்போது களுக்கென சிரித்துவிட்டேன். எவ்வளவு எளிமையான வரிகள். தொடர்ந்து ஆனந்தத்தேடல் குறித்தும், ஈஷா யோகா குறித்தும் சில விளக்கங்கள் தருகிறார். கடவுள் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தாலும், அல்லாதோரையும் வற்புறுத்தாமல் அரவணைத்துச்செல்வதை இவரது சிறப்பாக நான் காண்கிறேன். கட்டுக்கள் இல்லாத ரசனைகள் நிரம்பிய இயல்பான சிந்தனாவாதியாக இருக்கிறார். உடலைப்புரிந்துகொள்வதை முன்நிறுத்துகிறார். யோகாவைப்பற்றிய இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. ஜக்கி வாசுதேவைப் புகழ்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக்கொண்ட ஆன்மீகவாதிகள் அனைவருமே இவரைப்போலவே தெளிந்த சிந்தனையோடு இருக்கக்கூடாதா.. என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

பி.கு : அந்த சிடியில் இடையிடையே நய்ஹாவின் புண்ணியத்தில் டிவியில் நாம் பார்த்திராத ‘பெண்மையைப்போற்றுவோம்’ விளம்பரங்கள் வருகின்றன. அனைத்திலும் விதவிதமான வசனங்களோடு திரு. சாலமன் பாப்பையா நம்மை மயக்குகிறார்.

“ ஒருவரோட வலிய இன்னொருவர் உணர முடியுமா..
ஒருத்தரோட பசிய இன்னொருத்தர் புரிஞ்சுக்க முடியுமா..
முடியுதே..
ஒருத்தரால முடியுதே.. யாரு.. யாரு? அம்மா.!
குழந்த வலியில அழுவுதா, பசியில அழுவுதான்னு தாய்க்கு மட்டுந்தானேய்யா தெரியுது. அந்த ஒடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவ ஒடம்பு பதறுதே.. குழந்தைக்கு பசிச்சா.. இவ நெஞ்சுல பாலூறுதே.! விந்தைய்யா..விந்தை. இந்த அபூர்வ பெண்மணிய தினமும் வணங்கணும்யா.. ”

என்று அவர் கம்பீரமாக கூறும் போது ஆமா.. ஆமா.. என்று சொல்லத்தோன்றுகிறது.

“சொல்லச்சொல்ல இனிக்கிற சொல் அம்மா.
ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பரிணாமம்.
இது இயற்கையின் ஒலி.
நினைச்சா தியானம்.
உச்சரிச்சா மந்திரம்.
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.
அம்மாவை கையெடுத்து வணங்குவோம்”

மீண்டும் ஆமா.. ஆமா.!
sivachandran
entha uyirinathirkum utarpayirci theevaiyillai. than unavai thaanee theetikkontaal entha uyirinathirkum utarpayirci theevaiyeeyillai.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.