முதலாவது

எது குறித்தென்ற

தெளிவு வேண்டும்.

 

இரண்டாவது

இதுவரை இதுபோல்

இல்லாதிருக்க வேண்டும்.

 

மூன்றாவது

முந்தையவற்றிலிருந்து ஓரடி

முன்னே போக வேண்டும்.

 

நான்காவது

நாளை எங்காவது

பேசப்பட வேண்டும்.

 

ஐந்தாவது

அதுவாய் இறங்கி

வரவேண்டும்.

 

ஆறாவது

அடுத்தவரைக் கவர

ஆகிச் செய்ததாய்

இருக்கக் கூடாது.

 

ஏழாவது

ஏதாவது தொக்கி

நிற்றல் நலம்.

 

எட்டாவது

எதையாவது அதுவே

சொல்லவேண்டும்.

 

ஒன்பதாவது

ஓசை நயமிருத்தல்

ஒன்றும் குற்றமில்லை.

 

பத்தாவது

பிறந்த கவிதை

கொள்ள வேண்டும்

பொருத்தமான

தலைப்பொன்றும்.

 

- செல்வராஜ் ஜெகதீசன்

Comments

6 comments

6
மார்கண்டேயன்
பத்து நிலைகளில் மனதில் பதியுமாறு கவிதை பதிப்பதை கவிதையாகவே பதித்தமைக்கு பதினொரு (உங்கள் பத்து + என் நன்றி ஒன்று = பதினொன்று) நன்றி,

(கவிதை)செல்வத்துக்கு(அரசனாய்)ராஜ் (கவி)ஜெக(த்திற்கு)தீசனாய் பெருமை அடைவதற்கு அன்பார்ந்த வாழ்த்துகள்
கவிதா
கவிதையும், கவிதையை பாராட்டிய முறையும் போற்றுவதர்க்குரியது
aahaaaa
oviyamum kavithaiyum aaaaaaahaaaaaaa!
sumi
Kavithai very very Nice Sir
iniyavan
அற்புதம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.