ஆயிரம் பார்வை

அரைநிமிட சிமிட்டல்

அளவான புன்னகை

அதிசயிக்கும் வண்ணம்

என் வானத்தில் மட்டும்.

 

என் கற்பனை வானத்து

ஒப்பனைச் சூரியன்

மறையாத அந்திவானத்தை

அடையாளப்படுத்தும்

இருள் கசியும் என் இரவு!

 

காதை உரசும் இளங்காற்று

மட்டுமல்ல,

எதிர்வீட்டு ஜன்னலும்

கூடதான் எனக்கு

வார்த்தைகளை பிணைக்கிறது.

 

தொடுவானத்தின்

இரவல்களை

உவமையாக்கி

நடுவானத்தின்

கொடையால்

கோர்க்கப்பட்டது!

 

அசையாத இலைகளில்

சிக்கிக்கொண்ட

அடுத்தவரிகள்,

மெல்லிய மேகத்தினூடே

கண்டெடுக்கப்படுகிறது.

 

கட்டெறும்புகளால்

கரைந்த

ஒற்றுப்புள்ளிகள்,

எனக்கு திருஷ்டிகழிக்கும்

கொசுக்களால்

முற்றுபெறும்.

 

கவிதை நிலவுக்கு

ஒரு முத்தமிட்டு

இரவின் மடியில்

பள்ளி கொள்ள

விடியும் வரை

மொட்டை மாடிமட்டும்

துணையாக


- நீச்சல்காரன்

Comments

4 comments

4
அரவிந்தன்
வாசித்து முடித்த பின்னரும் மொட்டை மாடியிலேயே மயங்கிக் கிடக்கிறேன் !
மார்கண்டேயன்
நீச்சல்காரரே, மொட்டை மாடியில் கூட (கவி)நீர் நிரப்பி (கவி)நீச்சல் தெரியாதவரையும் (கவி)நீச்சலடிக்க வைத்து விட்டீரே !
உண்மையிலேயே நீர் பெரிய நீச்சல்காரர் தானைய்யா ! வாழ்த்துகள்.
rajan , sudhan
unga kavithai romba romba romba beauty
viji
very nice kavithai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.