தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்

தரணிபுகழ வாழ்ந்துகாட்ட அதுவே முதல்நாள்

 

அரசியல் கோமாளிகள் ஆளும் தமிழ்நாட்டில்

அமைதியின்மை தன்வேரை ஆழச்செலுத்துறதே!

உழைப்போர் நிலை ஒவ்வொரு நாளும் தாழ்மையுற

ஊதாரிகள் படம் தாங்கி ஊர்முனை சிரிக்கிறதே!

 

கேரளா ஆந்திரா கர்நாடகா அவரவர் ஆட்சி செய்ய

கேடுகெட்டத் தமிழன் அவர்களாள கேட்டுவாங்கித் தின்கிறானே!

தன்இனத்தை தாழவைத்து தலையாட்டி கோடிசேர்த்து

தறுதலை பட்டம்பெற்று சிரித்து தம்பட்டம் அடிக்கிறானே!

 

தன்மானம் காக்க தன்எதிர்ப்பைக் காட்டும் தரணிவாழ் உயிர்களைப் பார்!

தன்மானம்இழந்து தன்னினத்தைஅழிக்க தர்க்கம்செய்யும் தமிழனைப் பார்!

கைஏந்தி வாழும்இவன் காலம்காட்டும் சங்கத் தமிழ் வாரிசா?þஅல்லது

கயவாளிக்குணம் பெற்றஇவன் காட்டுமிராண்டித் தலைமயிரா?

 

பேருக்குத்தான் தமிழனென்றால் பேரிடி இவன்தலை விழட்டும்

பிறப்பவர்கள் இனிமேலாவது பிறர்புகழ மானம் பெறட்டும்

நாய்களைப்போல் நரிகளைப்போல் நடித்துவாழ வேண்டாம்þபிறர்

நயவஞ்சகத்தில் நலம்பெற்று அவரை நக்கி வாழவேண்டாம்!

 

பிறர் கையில் தமிழகமோ விழிபிதுங்கி வெம்புது

பிறப்புரிமை பிறர் சுரண்ட பேச்சுத்திணறிக் கிடக்குது

உணர்வுபெற்று உனை உணர்ந்து ஓங்கி எழுடா தமிழா!-þபிற

ஊதாரிகள் ஓட ஓட உனது ஆட்சி படைடா தமிழா!

-பொன்பரப்பியான்


 

Comments

5 comments

5
Dr.S.Ramakrishnan
Good peom. Tamils should realize the culprits who are acting like the leaders of Tamils. Thanks to Ponparappiyan.
ranga
நல்ல கவிதையைத் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

தன்னினத்தை தாழவைத்து தலையாட்டிக் கோடிசேர்ப்பவர்க்குக் காவடி தூக்கும் தமிழரை நினைத்தால் நெஞ்சு கொதிக்கத்தான் செய்கிறது.

இந்நிலையினை எடுத்துக்கூற மரபுக்கவிதை வடிவம் மிகவும் சரியானதும் தற்காலங்களில் பெரிதும் கையாளப்படாததுமாகும்.

தொடர்ந்து மரபுக் கவிதைவழி எழுதிட வேண்டும் எனக் கோருகிறேன்.
Morthekai
Thanks Ponparapiyaan for this poem. Yes, we are not united and that is why we couldn't be nurturing our better culture.
bharathidhasan
நடிகன் படங்களுக்கு பாலாபிஷேகம் நடக்கும்வரை இங்கே தமிழனின் தன்மான ஆட்சி கானல் நீரே.
darwin
We should eradicate the castism that is main barrier for unity of Tamilian.

Thanks for your meaningful words.

Thamizhnattai oru thanmanamulla thamizhan aalum naalai ethiparkkum ungalil oruvan.
Darwin

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.