அடைப்பை சரிசெய்ய

மூழ்கிய

அண்ணனைக்

காணவில்லை.

என்னுள் பதட்டம்

இந்த வேலை

முத்தெடுப்பது போலல்ல.

இறந்திருப்பானோ?

அச்சம்.

இல்லை.

அவன்

உயிரோடுதான்

இருக்கிறான்.

மலங்களுக்கிடையே

நீர்க் குமிழ்கள்

உறுதி செய்கின்றன

வெளியே வந்த அண்ணன்

தலை, உடல்  எல்லாம்

மலம்தான்.

அண்ணனைக் கட்டித் தழுவி

கண்ணீர் விட்டேன்

அண்ணனே எனக்கு

முத்துதான்.

-இலமு

Pin It