karunanidhi_subavee

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்களை, மருத்துவ உதவிக்காகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ஆகிய நானும், 26.04.2010 இரவு 8 மணிக்குத் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றோம். அச்சந்திப்பின்போது துணை முதல்வர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களும் உடன் இருந்தனர். அச்சந்திப்பையும், அதன்பின் நடைபெற்ற செயல்பாடுகளையும் பதிவு செய்ய வேண்டியமை, காலத்தின் தேவையாக உள்ளது.

மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் “இதுல எனக்கு என்ன இருக்கு? அவுங்களை நான் ஏன் தடுக்கப் போறேன்? நான்தான் சட்டமன்றத்திலேயே சொன்னேனே... அவுங்ககிட்ட இருந்து கடிதம் வந்தா, உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவுங்களை வர வைக்கலாம்” என்றார். எங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வீரமணி அய்யா, கலைஞரின் அருகில் சென்று, “அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?” என்று கேட்க, “அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்” என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.

பிறகு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், “இந்தத் தகவல் அவுங்க இங்க வரதுக்கு முன்னாடியே நமக்கு வந்திருந்தா, ஒரு பிரச்சினையும் இல்லாம எல்லாம் நல்லா முடிஞ்சிருக்கும்” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

மேலே உள்ள கூற்றில் இருக்கும் உண்மையைத் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் நம் தமிழீழ உறவுகளும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் பணிவான வேண்டுகோள்.

அம்மா சென்னை விமான நிலையம் வந்திறங்கி, அங்கு சிக்கல்கள் ஏற்பட்ட பின்னரே, நள்ளிரவில் நண்பர் திருமாவளவனோடும், என்னோடும் வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பு கொண்டனர். “கலைஞரையும், எங்களையும் இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா?” என்று வருத்தத்துடன் கேட்டேன். “இல்லையில்லை, நாங்கள் யாருக்குமே சொல்லவில்லை” என்று கூறினார். “அப்படியானால், நெடுமாறன் அய்யாவிற்கும், அண்ணன் வைகோ விற்கும் மட்டும் எப்படிச் செய்தி தெரிந்தது?” என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை.

அதற்கான விடை இப்போது தெரிந்திருக்கிறது. ‘தென்செய்தி’ இதழில் பூங்குழலி எழுதியுள்ள முகப்புக் கட்டுரையில், “ஒரு வார காலமாக, எந்நேரமும் வரலாம் என்று காத்திருந்ததால்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘இரவு 8.30 மணிக்கே அப்பா (நெடுமாறன் அய்யா) மூலம் பார்வதி பாட்டி வர இருப்பதை அறிந்தேன்’ என்றும் குறிப்பிடுகின்றார். எனவே, நெடுமாறன், வைகோ இருவருக்கும் ஏற்கனவே செய்தி சொல்லப்பட்டிருப்பது தெளிவாகின்றது.

அந்த 8.30 மணிக்கு, எங்கள் மூவரில் யாரேனும் ஒருவருக்குச் செய்தி தெரிந்திருந்தால் கூட, அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும்.

என்ன செய்வது... கலைஞரையும், கலைஞரின் ஆதரவாளர்களையும் அவர்கள் நம்பவில்லை. ஆனால், பிரபாகரனின் பெற்றோர் பெயரைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் இங்கு திரும்ப வருவதைச் சட்டத்திற்கு உட்பட்டோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ தடுத்திட வேண்டும் என்றும் 2003 இல் கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அவருடைய ஆதரவாளர்களையும், வெளிநாட்டில் வாழும் தமிழீழத் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் நம்புகின்றனர்.

அந்த அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே, வைகோவை ஜெயலலிதா இயக்குகின்றார். வைகோ, அய்யா நெடுமாறனை இயக்குகின்றார். எனவேதான், கலைஞருக்கு எதிராக ஜெயலலிதாவின் தலைமையிலோ, வைகோவின் தலைமையிலோ நடந்திருக்க வேண்டிய உண்ணாவிரதம், நெடுமாறன் ஐயா தலைமையில் நடைபெற்றது.

அம்மாவை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரவேண்டும், ஈழ மக்களுக்கு எவ்வகையிலேனும் உதவ வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, எப்படியேனும் கலைஞர் அரசுக்கு எதிராக ஏதேனும் ஒன்றைக் கையில் எடுக்க வேண்டும் என்ற முனைப்பே இங்கு கூடுதலாகத் தென்படுகின்றது.

இனியும் தயங்காமல், இரண்டு செய்திகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. 1. அகவை முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயைத் திருப்பி அனுப்பிய அதிகாரிகளின் செயல் எப்படி மனித நேயமற்றதோ, அவ்வாறே அத்தாயை வைத்து உள்ளூர் அரசியல் செய்ய நினைப்பதும் மனித நேயமற்ற செயலே.

2. ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை, தமிழ்த்தேசியத் தலைவர்கள் இனியேனும் தயவுசெய்து விட்டுவிட வேண்டும் என்று, பெரியார் திடல் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் நண்பர் திருமாவளவன். அது அவர்களால் முடியாதெனில், நடுநிலையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் போலித்தனத்தையாவது உதறிவிட்டு, தாங்கள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகவே செயல்படுகின்றோம் என்னும் உண்மையையேனும் உலகுக்கு உரைத்திட வேண்டும்.

கலைஞர் மீதான அவதூறுகளுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 03.05.10அன்று துணை முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பும், அன்று இரவு முதல்வர் அளித்த பேட்டியும் அமைந்துள்ளன.

மலேசியாவிலிருந்து பெறப்பட்ட அம்மாவின் கடிதத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியதுடன் நிற்காமல், அவரது மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ள முதல்வரின் கனிவைத் தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்றுப் போற்றுகிறது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்து மகிழ்கின்றனர்.

- சுப.வீரபாண்டியன்

Comments

17 comments

17
R Nagaraj
////கலைஞரின் அருகில் சென்று, “அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?” என்று கேட்க, “அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்” என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.////

ada ada ada ada ada ada
Muththu
>>“இந்தத் தகவல் அவுங்க இங்க வரதுக்கு முன்னாடியே நமக்கு வந்திருந்தா, ஒரு பிரச்சினையும் இல்லாம எல்லாம் நல்லா முடிஞ்சிருக்கும்” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

முன்னாலேயே தெரியப் படுத்தாததால் தான் பிரச்சினைப் பண்ணினோம் எனபது தெளிவாகின்றது
சர்வசித்தன்
திரு சுப.வீ அவர்களின் கட்டுரயில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்தினை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.எனினும், தமது ‘தலைவ’ருக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் அவரது ‘விசுவாசம்’ பாராட்டத்தக்கதே.
அது சரி, முன்பே தெரிந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள். ஐம்பதினாயிரம் தமிழர்கள் எரிகொண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, குளிரூட்டிகள் சகிதம் மெரினாவில் மூன்று மணி நேரம் காற்று வாங்கியது போல் ஏதாவது செய்திருப்பீர்கள். தமிழர்கள்,குறிப்பாக ‘ஈழத் தமிழர்கள்’ இப்போது கலைஞரது தமிழபிமானத்தைவிடவும், நெடுமாறன் ஐயாவினதும், வைக்கோ வினதும் தமிழுணர்வு உண்மையானது என்று எண்ணுவதால், ஒருவேளை பார்வதி அம்மாவின் வருகையினை-அது பற்றித் தெரிந்த சிலர்- அவர்களிடம் தெரிவித்திருக்கலாம்! அதில் தப்பேதும் இருப்பதாகப் படவில்லை. ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் எல்லோரும் தமிழுணர்வோ, மனிதாபிமானமோ அற்றவர்கள் என்பது போன்று கருத்து வெளியிடுகிறீர்கள். இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழுணர்வு உள்ளவர்கள் ‘அரசியலில்’ அவர்கள் யாரைச் சார்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் ‘மனிதர்களாக- பிறர் துன்பம் கண்டு துடிப்பவர்களாக இருந்தால், அதுவே மானுடத்தை வாழ்விக்கும். அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் மாறலாம்,ஆனால், மானுட விழுமியங்கள் மனித இனம் இந்த மண்ணில் வாழும் வரை ஒன்றேதான்.
கலைஞர்-இதனைப் பதவி,தனது குடும்ப நன்மை இவற்றுக்காக கைவிட்டுவிட்டதை உலகம் உணர்ந்து ஒரு வருடந்தானே ஆகிறது.அதற்குள் மறந்து விடுவார்களா?
அந்த அம்மா, கலைஞரை நம்புவதை விடவும், ராஜபக்‌ஷேவை நம்பலாம் என்றோ என்னவோ, இப்போது இலங்கை சென்றுவிட்டாராம்!
கலைஞர் மீது உலகத் தமிழர்கள் கொண்டிருந்த பற்றினையும், மதிப்பினையும் அவரது சில நடவடிக்கைகள் குலைத்து விட்டன என்பது உண்மையே. ஆனால், அது கலைஞருக்கு மட்டும் நேர்ந்த ‘இழப்பல்ல’ தமிழினத்தினதும் இழப்பே.
‘தான் வணங்கும் தெய்வம், உண்மையில் தெய்வமல்ல-அது வெறும் கல்லே’ என்று பக்தன் சந்தேகப்பட நேர்ந்தால் ஏற்படும் பரிதவிப்பு அது.
மற்றும்படி, கலைஞரது ஆற்றலையும்,அனுபவத்தையும்,அரசியல் தந்திரத்தையும் மதிக்கிறோம்.
ஆனால், தவறு என்று தெரிந்தபின்பும் சமத்காரமாகப் பேசுவதாலும்,எழுதுவதாலும் அவை அனைத்தையும் நியாயப்படுத்திவிடலாம் என அவர் எண்ணுவதை வெறுக்கிறோம்.
சுப.வீ அவர்கள் இதனைப் புரிந்து கொண்டால் ,அவராவது தவறு செய்யாது தப்பலாம்.
மன்னிப்பது மனிதனைத் தேவனாக்கும், செய்த தவறுகளை ஒத்துக் கொள்வது மனிதனை ‘மானுடனாக’ வாழவைக்கும்.
Ganesan
Mr.SuBa.Vee. Please stop this kind of nonsense talking. We know what is happening in tamil nadu.

I really appreciate Mrs.Parvathi amma,not to come to Our Tamil Nadu. She is a mother of great leader.

I kindly request Mr.Suba.Vee stop talking like this. if you want to support karuna please do it. Why are calling jayalalitha here, we know about Jaya.

We as a Tamil really feel Shame about this incident.
senkathiron
I wonder If the same conditions are implemented by Jaylalalitha what will be the Subha vi reaction?
Madurai Samy
This idiot Suba Vee is a supporter of Karunanidhi.He has to stop talking non-sense and should realise no one is listen to him.He cannot cheat the people hereafter.
moses prabhu
karunaanidhiyin namber one jaalraa suba vee enbathai meendum niriubithirukaar...kalaingar pull arithu povaar....
பரிமள ராசன்
தன் குடும்பம் சொகுசாகவும்,தன் பெண்டு பிள்ளைகள் அதிகாரத்திலும் இருக்கவேண்டும் என்கிற காரனத்தினால் தமிழினத்தையே கொன்று குவித்து அவர்களின் பிணத்தின் மேல் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவன் கருணா(நிதி).அவ்னுக்காக தன்னலமும் தன் சொகுசான் வாழ்க்கையும் வேண்டி ஜால்ரா தட்டுபவன்களின் சத்தம் காதை கிழிக்கிறது.திருமா,வீரமணி,இன்னும் இந்த கட்டுரை எழுதிய சில்லரைகள்போல் பலபேர்.ஆனாலும் அதையயும் மீறி ஈழத்தில் இவர்கள் கொன்று குவித்த தமிழர்களின் குரல் ஓர் ஆண்டை கடந்தாலும் எங்கள் நெஞ்சை கிழிக்கிறது.இதற்க்காக பதில் சொல்லியே ஆகவேண்டும்.வரலாறு ஜால்ராக்களுக்கு சில வாய்ப்புக்களை தரலாம்,ஆனால் வரலாற்றை மக்கள் திருத்தி எழுதும் போது உங்கள் நிலைகள் என்னவாகும் என்பதை ஒரு கணம் சிந்த்தித்து, தட்டும் ஜால்ராக்களையும்,அடியில் வருடிக்கொண்டு இருக்கும் உங்கள் கரங்களையும் கட்டுபடுத்திகொள்ளுங்கள்.இல்லாவிட்டால் உங்களை காப்பாற்ற அப்போது கருணாநிதி இருக்க மாட்டான்.
செல்லையா முத்துசாமி
அட என்னமா சோப்பு ***** இந்த ஆளு.

ஊருக்கு எல்லாம் தெரியும் என்று தெரிந்திருந்தும் நாகூசாமல் தன்னை நியாயப்படுத்தும் கருணாநிதிக்கு உம்மைவிட்டால் வேறு வாரிசு உண்டா?

சும்மா பேசுங்க சுபவீ.
வரலாற்றில் எத்தனையோபேர் நம்ம மூஞ்சியில துப்பிட்டான். தொடச்சிகிட்டே கலைஞர் புகழ் பாடுவோம்.
என்னநாஞ் சொல்றது!
Prabhakar
Well said...all of you in the comment section rather than pointing out the real critic about the article most of u were focused about the way to abuse Mr. Subavi... i do have the habit of reading his magazine... why dont you guys take some time to read other useful articles that are being published in his magazine.. it looks like a planned attempt to speak out your filthy language against an educated and a respectable man.... I really have a question in me...Well Done!! its good that you (the so called tamil patriots) did not have the courtesy to inform either Mr. Subavi or any one even by the side of Mr. karunanidhi about her travel to India and you all believe that Mr. Nedumaran and Mr. Vaiko are the reliable individuals to be informed..having said this what i fail to understand is...who the hell asked you to ring Mr.Subavee for a favor and who asked you to send a letter requesting for her immigration clearance..it is evident that he has not taken it himself to the notice of the government... Are you not ashamed to call him for a favor and then speak ill about him...He is lot busy with what he is doing and being a public icon he will have controversial views about his ideas..all that worries me is the abusive language that is being used in the comments section and it has no dignity and respect for an educated person..it looks like all of you are more personally related to Mr.Subavi and you know the in and out of his intentions..i have to accept the fact that i neither know him personally but I do watch and read all his articles and for a person like him who does not insult anyone in the way he expresses his views he does not deserve these third rated comments about him..it jus shows the impact of an illiterate or an imperious possessing a tool to express his thoughts..may I request the admin to restrict using abusive languages in this website against such a respectable man atleast according to me....Yes he has respect towards Mr.Karunanidhi and that is his wish to do so..He was arrested under POTA act for 1 year and 6 Months and he strongly reckons that Jayalalitha is the sole reason for it and I dont see any other reason as well and Karunanidhi has played a vital role in bringign them out and i think this is his personal thoughts and you definitely cant pass any vulgar comments against that..Well..is this the gratitude you show towards a person who has spent almost 20 years of his life for Tamil Eelam..you made the atmost use of him till 2009 and all of a sudden you realised that he is bad isn't it?? ashame on your part..Why dont you guys move to your own mother country and fight for the cause and sacrifice your life?? dont keep pointing others' mistakes instead think something productive...i'm sure he must have read your comments but least bothered about it...but as a person with great character and modesty i respect the scholar for what he is....

Cheers,
Prabhakar
Arumugam
suba vee kalaignarkku soap podraru. kalaignar congress ku soap podraru.

why the hell kalaignar is with congress if at all he cares for srilankan tamils?

avaroda unnaviradha nadagam, MP team anuppi rajapakse ku good guy certificate koduthathu... ithellam oru unmaiyana tamizhanala jeeranikavae mudiyathu.

Mr. Suba Vee, please stop using this site for all your jaalras about kalaignar...
prabhakar
REMEMBER KALAIGNAR is the CM of TAMIL NADU and not PM of Srilanka ...I strongly believe that Mr. Subavi supports him because of their similar ideas when it comes to Tamil and we as tamils from Tamil Nadu believe that Kalaingar is doing much better than what Miss. Jayalalitha contributed to the society...perhaps this has made Subavi to stand by Karunanidhi...dont use this topic to play within Tamil Nadu politics...why are you not able to understand the fact that you (unmaiyana thamizhans) ring Mr.Subavi always for a favor...why cant you all take a call to stop that non sense??

So you also believe that Mr. Vaiko and Mr.Nedumaran are flattering behind Miss.Jayalalitha?? if you think that it is pure internal politics then it is the same between Mr.Subavi and the current ruling party as well...

Apart from this, a message to Mr. Subavi...Thanks for this article by which you are trying to tear off the masks of the political leaders (so called) like Mr.Vaiko and Mr.Nedumaran and I'm sure there are lots of people who trust you and believe your information...We recommend you to write such articles...A small suggestion like how you ignore these comments, going forward as a strong believer of your thoughts and ideas may I request you to ignore the calls from Tamil Srilankans as well??? It will save you from all these third rated comments and also your time..

Cheers,
Prabhakar
Neya
Sariyagach sonneergal prabahar. Nalla vimarsanam endraal thavarugalai suttik kaatta vendum. Nallathaip paaratta vendum. Appadi illamal thittikkonde iruppavargalaip patri namakku oru doubt varuthu. Oru velai mananilai il yethavathu kolaaru irukkumo endru. Oruvelai Kalaignar phobiya noi thakki irukkumo?
நிலவன்
சுபவீ அய்யா, வணக்கம்.அய்யா நெடுமாறன் வைகோவிற்கு மட்டுல்ல தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தெரிந்துதான் விமானநிலையத்தில காவல்துறைக் குவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வருக்குத் தெரியாது என்பதை நம்பமுடியவில்லை. சட்டமன்றத்தில் தெரியாது என்றால் மத்திய அரசு கலைஞரை மோசடி செய்துள்ளது. கலைஞருக்கு மத்திய அரசின் மீதுகோபம் வரவில்லை. இதுதான் நெருடல்.
இனமானம் கலைஞரால் கைகழுவிடப்பட்டுவிட்டது. இனி அவரை ஆதரித்து என்ன பயன்?
Neya
Maanamigu Nilavan avargal ondrai thelivaakka vendum. Veru yaarai aathariththaal bayan kidaikkum ?
Neya
Umgalidam vidai illaiya nilavan. Ungalaip pondra thiruviladayal tharumigal niraiyap per irukkiraargal inkey. ungal kelvikalukku neengal muthalil pathilaith thedungal. piragu matravargalai kelvigal ketgalam.
ezhil
Ungaludan seirthu eyakkamaga velai seithathai nenaiththal enannku athu varuppaga ulladhu.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.