ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,

வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30.  பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன்.

பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன்.

நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியாத வயது. தினசரிகளில் தமிழ்த் திரைச்செய்திகள் வானொலிகளில் திரைப்பாடல்கள் மட்டுமே பார்க்கும் கேட்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். அன்று ஒருநாள் தவறி ஒரு அரசியல் செய்தியை பார்த்து விட்டேன்.

வைகோ-ஈழத்தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அப்பொழுது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது அது என்ன ஈழத்தமிழர்? பல பெரியவர்களிடம் வினவினேன் அதைப்பற்றி அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. பின்பு விடுப்பு முடிந்து பள்ளி சென்றபோது விடுதிக் காப்பாளரிடம் வினவியபோது, அந்த மெத்தப்படித்த மேதாவி, ராமேசுவரத்திற்கு தெற்கே கடலுக்குள் உள்ள இலங்கையை பிரபாகரனும் இங்கிருந்து சென்ற பிழைப்பு தமிழர்களும் துண்டாடுகிறார்கள் என்று ஒரு தவறான தகவலை சொன்னார்.

அப்படியே காலங்கள் சுழன்றது. சிற்றலையில் தமிழோசை, வெரித்தாஸ் வானொலிகள் அறிமுகமாக அவை தரும் செய்திகளால் தெளிவடைந்த நான், வெரித்தாசில் ஜெகத் கஸ்பார் உரை மற்றும் ஐபிசியில் தங்கள் உரையினையும் பதிவு செய்து கேட்டு தமிழுணர்வு பெற்றவன். ஆனால் இன்று தங்கள் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாய் இல்லை. காரணம் “நாங்கள் புறநானூற்றை பதிப்பித்தோம் புலிகள்தான் அதை புதுப்பித்தார்கள்” என்று புலிவழித் தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, இன்று கலைஞர்தான் தமிழ் தமிழனின் நல்லாட்சி என்று பேசுகிறீர்கள். தமிழினத்தை அழிவில் தள்ளிவிட்டு ஆட்சி செய்வதுதான் நல்லாட்சியா?

குஷ்பு, நமீதா, ரம்பா போன்ற தமிழ் தெரியாதவர்களை வைத்து கலைஞர் தொலைக்காட்சியில் நமக்கு தமிழ் கற்றுத் தருகிறாரே இதுதான் தமிழ் வளர்ச்சியா? ‘தமிழர்களே தமிழர்களே என்னைக்கடலில் வீசினாலும்’ என்று சொல்லிக்கொண்டு, ஆறு மாதங்களாக இந்தோனேசியக் கடலில் தவிக்கும் தமிழர்களுக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என்ன செய்தார்? தன்பிள்ளைகளுக்கு அந்தத் துறை இந்தத் துறை வேண்டும் என்று டெல்லிக்கு நேரில் செல்லும் கலைஞர் தமிழன் பிரச்சினைக்கு மட்டும் இணைய சேவை பெருகிவிட்ட இக்காலத்தில் கடிதம் மட்டுமே எழுதுவது ஏன்?

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழன் ஈழப்பிரச்சினையில் முரணற்ற, பகிரங்கமான, தெளிவான ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளாரா?அதை விடுங்கள் அண்டை மாநிலங்களில் ஒன்றிலேனும் நமக்கான உரிமையைப் பெற தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தினாரா? அல்லது மீனவர் சுடப்படுவதை தடுக்க அழுத்தம் கொடுத்தாரா?

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது தமிழக அரசுக்கு தெரியாதென்றால் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் தமிழக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது எப்படி? கலைஞர் வைகோவையும், வைகோ கலைஞரையும் குற்றம் சுமத்துவது புதிதல்ல. அப்படியிருக்க நீங்கள் ஏன் பொங்குகிறீர்கள் கருணாவின் நாவாக இருந்தோம் என்று வரலாற்றில் இடம் பெறவா? '

முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள். அப்படியெனில், உங்களை புலம்பெயர் மக்கள் மதிக்கவில்லை, அழைப்புக்கொடுத்து மேடையேற்றி விருந்து கொடுத்து கை செலவுக்கு பணம் கொடுத்து வழியனுப்பவில்லை, உதவி என்றவுடன் வருகிறார்கள் என்கிற ஆதிக்கப்போக்கு அப்படித்தானே? அதனால்தான் அம்மாவை திருப்பி அனுப்பி உங்கள் பலத்தை காட்டுனீர்களோ? புலிகள் புகழின் உச்சியில் இருந்தபோது அவர்கள் புகழ் பாடி வயிறு வளர்த்தீர், புலிகள் வீழ்ந்து புலம் பெயர் மக்கள் புண்ணாகி போனதால் புகழ்பாடி வயிறு வளர்க்க வழியின்றி கலைஞருக்கு வடம் பிடிக்கிறீர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இறுதிக்கட்டப் போரின்போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக, புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் சரணடைந்தால் உயிருக்கு உறுதி வழங்கப்படும் என்று கூறினீர்கள், ஆனால் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்ஸ்பார் எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்கஸ்பார் எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களும்  டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்லவில்லை.

இணையத்தில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் நிழல் யுத்தம் நடத்துகிறார்கள் என்று கலைஞர் சகோதர யுத்தம் என்று சொன்னதுபோல் பேசுகிறீர்கள். நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் நேரம் ஒதுக்கிய மேடையில் எங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் இல்லையே ஏன்? உண்மையை மறைக்கும் உங்களைப் போன்றவர்களை தமிழின வரலாறு மன்னிக்காது. தமிழின உணர்வாளர்களை கூறுபோடும் முயற்சிகள் கருத்துக்கள் இணையத்தளங்களில் இடம் பெறுகிறது என்பதற்காக உங்களின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.

யாரும் எழுத முடியாது பேச முடியாது என்ற நிலை இருந்ததால்தான் உங்களைப் போன்றோர் தமிழ் பற்றாளர்களாகவும் தலைவர்களாகவும் ஆனீர்கள் நாங்கள் உங்களை மெச்சினோம். இணையத்தை விட்டு வெளியில் வாருங்கள் என்கிறீர்கள். ஏன் கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டு நாங்கள் சிந்தனையற்று மண்ணாய்ப் போகவேண்டும், நீங்கள் குதிரை ஏற வேண்டுமா? அது இனி நடக்காது.

வெளிநாட்டில் இருந்துகொண்டு எதையாவது எழுதாதீர்கள். இங்கு வாருங்கள் சேர்ந்து போராடுவோம் என்கிறீர்கள். தாயகத்தில்  போராடுபவனுக்கெல்லாம் தமிழினத் தலைவர்தான் வைத்தாரே ஆப்பு அது போதாதா. இதுதான் உங்கள் மக்களாட்சித்தத்துவம். தமிழினப் பிரச்சினைக்கு ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டில் வந்து போராட வேண்டும் என்றால் உங்களுக்கு எதற்கு ஆட்சிபீடம் நீங்களும் வீதிக்கு வந்து விட வேண்டியதுதானே.

நல்லாட்சி என்றால் ஏன் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கமுடியாத வறியநிலை? ஏன் நாங்கள் வெளிநாடுகளில் வந்து காய வேண்டும்? எல்லாம் உங்கள் திராவிட சுரண்டல் அரசியல். பெரியார் திடலில் வைகோவுக்கும், நெடுமாறனுக்கும்தான் கூட்டம் கூட்டப்பட்டது என்றால் உங்களின் ஈழத்தமிழ் குரல்கொடுப்பு நின்று போனதா? தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழத்தமிழ் அரசியல் வேறு என்கிறீர்கள். சரி அதற்காக ஈழத்தமிழனைக் கொல்ல, 2500 கோடி கொடுப்பதை வேடிக்கை பார்ப்ப்பீர்களா?  நம் எதிரியான சிங்களன் நம் பலவீனத்தை நன்கே உணர்ந்ததால்தான் இன அழிப்பை தைரியமாக செய்தான். அதனால்தான் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளுக்கு இந்தியா செவி சாய்க்காது என்றான் பொன்சேகா.

கலைஞர், ஜெயலலிதா, வைகோ, பழ.நெடு, ராமதாசு, திருமா, சுப.வீ, ஜெகத் கஸ்பார் போன்ற பதவிக்கும் பணத்துக்கும் நக்கீரனில் சுய விளம்பரத்திற்கும் விலை போகும் வெங்காயவாதிகளை எதிரி சரியாகவே எடைபோட்டு வைத்திருக்கிறான். இனி விளம்பரப் பெருமைக்காக எந்த தமிழ்நாட்டுத் தலைவனும் ஈழத்தின் குரல் நாங்கள்தான் என்று முழங்குவதை நிறுத்துங்கள். பேசாமல் செயலில் ஏதாவது அந்த மக்களுக்கு உதவி செய்யுங்க இல்லன்னா ஆளாளுக்கு வசை பாடுவதை நிறுத்திட்டு அமுக்கிட்டு இருங்க. விதி என்று அம்மக்கள் நொந்து கொள்ளட்டும்.

நடுநிலைக்கு நீங்கள் சொன்ன உதாரணத்தோடு நிறைவு செய்கிறேன். ஒருவன் அடிக்கிறான் இன்னொருவன் அடிபடுகிறான், இதில் அடிப்பவன் பக்கம் அல்லது அடிபடுபவன் பக்கம் இதுதான் நடுநிலை. இருவர் பக்கமும் இல்லை என்பவன் அடிப்பவனுக்கு ஆதரவு தருகிறான்..

கொக்கின் வாயில் மீன், பாவம் மீன் என்றும் பிறகு பாவம் கொக்கு அதற்கும் வாய் வலிக்குமே என்பவன் நீதியின்பால் நிற்பவனும் இல்லை. ஐபிசி-வானொலியில் எனக்கு நீங்கள் சொன்ன இந்த கதையுடன் நிறைவு செய்வோம். அடுத்த மடலில் சந்திப்போம்!

நன்றியுடன்

கூ.விசயகுமார்,அமீரகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

Comments

18 comments

18
aravindan
அருமையான கேள்விகள் தோழரே... இதற்கெல்லாம் சுபவீ பதில் சொல்வார் என்று மற்றும் நினைக்க வேண்டாம். அவர் கலைஞருக்கு சிஞ்சா அடிக்க போயிரிப்பார். --அரவிந்தன்,அமீரகம்.
karuvai murugu
intha naal suba veeku mosamana naal. karunanithiyin kaithadigalaga iruppavargalukku tamilargalin thunbam theriyathu nanbare!. avargal medaiyil vaaikiliya pesuvargal. dhiravidam tamil naattil veeltchiyadayatha varai suba veekkalin pechum olithukkonduthan irukkum. dhiravidathai veelthuvom tamilargalai thalai nimirvom!
R Nagaraj
avarai poi thevai illammal nondukolvathil arththam illai.
kalaignarukku veru pala pirachinai irukirathu.
athanaal mudiyathu. avvalavu thaan.

jaya, sankara chariyai kolai caseil kaithu panninaalum cho porandravar jayavai atharippathu enn? aththai pola kolaignar enna seithaalum subavee avarai athrippaar/

jayavukku oru cho iruppathai pola
kalaignarukku oru subavee
ennaiyya vengayaam thappu kandeer ...?
Ameer
கொஞ்சம் பொறுங்கள் விஜய். சகோதர யுத்தம் கதையை நமது சுபவீயும் சொல்வார்.
ஷார்ஜாவிலிருந்து அமீர்.
appavi
எவன் தாண்டா நல்லவன் ????

அதை எவனும் சொல்ல மாட்ட்ரிங்க....
அக்னிப்புத்திரன்
கைக்கு மீறிச்சென்ற விஷயத்தில்கூட தன்னால் முடிந்த அளவு கலைஞர் எல்லாப்பிரச்சினைகளிலும் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். கலைஞரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் ஆதரிக்கிறார்கள். அதன் விளைவுதான் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைதேர்தல் வெற்றிகள். ஊசிப்போனவனும் ஊரை விட்டும், நாட்டை விட்டும் போன நாறாவாயன்களின் ஊத்தபல் உளறல் எல்லாம் இனி எடுபடாது.

வெளிநாடு போனவனுங்களுக்கு எல்லாம் ஓய்வு நேரத்தில் ஏற்படும் அரிப்புக்கு கலைஞர்தான் கிடைப்பார் போல இருக்கு. பெரிய மேதாவி போல கேள்வி கேட்டு இருக்கிறார். முதலில் அரசியலில் நடந்த அல்லது நடக்கும் நிகழ்வுகளை நன்கு புரிந்துகொண்டு கேள்விகள் கேட்க வர வேண்டும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. இம்மாதிரியான வெத்து வேட்டு அரைகிறுக்குகள் இப்போ டஜன் கணக்கில் கிளம்பி விட்டன. இவற்றுக்கெல்லாம் அய்யா திரு. சுப வீ அவர்கள் கவனம் செலுத்த வேண்டா. தமிழனத்திற்கும் தமிழர்களுக்கும் இ்ம்மாதிரியான புல்லுருவிகள் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை முறியடித்து தமிழனத்தை மேலும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல கலைஞர் கரத்தை வலுப்படுத்த வேண்டிருக்கும் பணியினை தொய்வில்லாமல் செய்யவும். எதிர்கால வரலாறு உங்களை வாழ்த்தும்.
siraj
The Rght Question Asking from Mr.Vijayakumar to Suba Vee. Ayya Suba Vee, You are the Role Model of us. So, Don't act anything Present, Think Future. Avoid theses type of Non-senses. Thank U
மகிழன்
அதான், சுப.வீயே சொல்லிட்டாரே...அவர் ஒரு தி.மு.க ஆதரவாளர்னு சொல்லிட்டாரே. அவரை ஒரு உடன்பிறப்புனு கணக்குல சேர்த்துக்கிட்டு, அமைதி ஆவோம், தமிழர்களே.
L.RAJAGURU
super
Agilan
அக்னிபுத்திரன் பார்வை ஒரு அயோகிய தனமாநது. நாங்கள் வாழுவுகாக புலன் பெயர்ந்துவிட்டால் உடனே எங்கள்லுக்கு உள் ஊர் அரசியல் தெரியாமல் போய் விடுமா?? என்ன ஒரு கண்டுபுடிப்பு??!! இவர் பிரியாணிகாக வோட்டு விற்கும் கழக காளையாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது உண்மையான தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை....!!

அங்கே களமாடி உயிர் நீத்த எங்கள் அண்ணன் பிரிபாக்ரன் ரத்த சுவடு கூட காய்ந்திரிக்காத வேளாயில் மகனுக்காக, மந்திரி பதவிகாக, சோனியா கையேந்தி நின்றவர் தானே உங்கள் கலைஞர்...!! இதை இன திரோகம், பச்சோந்தி தனம், இல்லை சந்தற்ப்ாவாதம் என்று சொல்லுங்கள் ஒத்து கொள்கிரோம். இந்த அயோகியத்னத்தை நீங்கள் வேண்டுமானால் "ராஜ தந்திரம்" என்று சாயம் பூசலாம். அதை நம்பும் ஒரு கூட்டமும் இருக்கலாம்! ஆனால் உண்மையான எந்த தமிழனாலும் அதை ஒரு போதும் ஒத்து கொள்ளமுடியாது...!!

இதில் வேதனை என்ன வென்றால் பெரும்பன்மயான தமிழன் தன் உணர்வை கூட வாக்கு மூலம் வெளிப்படுத்த முடியாத அளவு பிரியாணி காகவும், 500 காகவும் வாக்கை விற்கும் அவலத்தை வெற்றிகரமாக திராவிட அரசியல் இந்த 60 ஆண்டுகளில் செய்து இருக்கிறது..!!

தமிழா!
உன் வெட்டி தான் கோவனமாக ஊருக்கே விநியோகம்...!
இதை உணர்ந்தால் நீ சரித்திரம் படைப்பாய்
இல்லையேல்,
வெறும் தறிதிரமே பிள்ளைக்கு விட்டு செல்வாய்...
உணர்ந்திடு! விழித்திடு!!
அ. குமார ராஜ்
கலைஞர் ஆட்சியில் தமிழக மக்களில் பல்வேறு துறையிலும் சிறப்பு பெற்றுள்ளது என்பதை ஒருபாற் கோடும் குறைமதியின்ரே மறுப்பர். தமிழ்நாடு தனி நாடு அல்ல. மைய அரசின் ஆளுமைக்குட்பட்டது.ஈழ்த் தமிழர் இன்னல் போக்கக் கூட தமிழ் உணர்வாளர்கள் ஒன்று படாததற்கு யார் காரணம்? ஈழத்தை என்றும் வெறுக்கும் ஜெயலலிதா அம்மையாருடன் தேர்தல் போழ்து இணைந்தனரே இவர்கள்தான் உங்கட்கு உண்மையான தமிழ் உணர்வாளர்களாகப் படுகின்றனரோ? காழ்ப்புணர்ச்சி அகற்றி கண்ணோட்டம் செலுத்திக் கூறுங்கள். கலைஞர் தமிழகம் சிறக்க ஒல்லும்வகை உழைக்கிறாரா அல்லவா?
Agilan
அக்னிபுத்திரன் பார்வை ஒரு அயோகிய தனமாநது. நாங்கள் வாழுவுகாக புலன் பெயர்ந்துவிட்டால் உடனே எங்கள்லுக்கு உள் ஊர் அரசியல் தெரியாமல் போய் விடுமா?? என்ன ஒரு கண்டுபுடிப்பு??!! இவர் பிரியாணிகாக வோட்டு விற்கும் கழக காளையாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது உண்மையான தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை....!!

அங்கே களமாடி உயிர் நீத்த எங்கள் அண்ணன் பிரிபாக்ரன் ரத்த சுவடு கூட காய்ந்திரிக்காத வேளாயில் மகனுக்காக, மந்திரி பதவிகாக, சோனியா கையேந்தி நின்றவர் தானே உங்கள் கலைஞர்...!! இதை இன திரோகம், பச்சோந்தி தனம், இல்லை சந்தற்ப்ாவாதம் என்று சொல்லுங்கள் ஒத்து கொள்கிரோம். இந்த அயோகியத்னத்தை நீங்கள் வேண்டுமானால் "ராஜ தந்திரம்" என்று சாயம் பூசலாம். அதை நம்பும் ஒரு கூட்டமும் இருக்கலாம்! ஆனால் உண்மையான எந்த தமிழனாலும் அதை ஒரு போதும் ஒத்து கொள்ளமுடியாது...!!

இதில் வேதனை என்ன வென்றால் பெரும்பன்மயான தமிழன் தன் உணர்வை கூட வாக்கு மூலம் வெளிப்படுத்த முடியாத அளவு பிரியாணி காகவும், 500 காகவும் வாக்கை விற்கும் அவலத்தை வெற்றிகரமாக திராவிட அரசியல் இந்த 60 ஆண்டுகளில் செய்து இருக்கிறது..!!

தமிழா!
உன் வெட்டி தான் கோவனமாக ஊருக்கே விநியோகம்...!
இதை உணர்ந்தால் நீ சரித்திரம் படைப்பாய்
இல்லையேல்,
வெறும் தறிதிரமே பிள்ளைக்கு விட்டு செல்வாய்...
உணர்ந்திடு! விழித்திடு!!
ELANCHITHIRAN
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?சுபவீ புலி ஆதரவாளர் இல்லையென்றா, அவர் புலிகளை ஆதரித்து சிறை சென்ற பொது நீங்கள் எங்கே போனீர்கள்? ஏமாற்றுவதற்க்கு அவர் அரசியல் ஆதாயம் தேடுபவர் அல்ல.
Raj gounder
i am very much worried about this kind of controversy, we are tamil peoples ,many of you people are fighting against the worst situation against tamil ezlam, we need to do progressive action against the srilankan politics other wise need to guide the tamil people by giving food, dress and shelter .Don't complaint one to another.
god is grat he will has seeing all bad things and he will bless the people to get their life as his plan.
No one single person will not change and or save the people
kallaigar having so many work to do to the poor people to slave to his family.

He has construction kingdom for his hires.
so don't depend on him he is so great

He having so many problem to solve;;yes of course Stalin, Azagiri, kanimozhili raja, Maran brothers, Muga Muthu, etc

we are wise people we think it out the day will come they will get all in their good life soooonnnnnnnnnnnnnnn.
SELVAA
"நல்லாட்சி என்றால் ஏன் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கமுடியாத வறியநிலை? ஏன் நாங்கள் வெளிநாடுகளில் வந்து காய வேண்டும்? எல்லாம் உங்கள் திராவிட சுரண்டல் அரசியல்."

மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? படித்துவிட்டு இந்தியாவில் எத்தனை நாட்கள் வேலைக்காக முயற்சி செய்தீர்கள்? இப்போது அங்கு என்ன செய்கிறீர்கள்? என்று கூற முடியுமா.
Yesa
எவன் தாண்டா நல்லவன் ???? அதை எவனும் சொல்ல மாட்ட்ரிங்க....

ஸுபெர் அப்பாவி.....சிரிப்பை அடக்க முடியவில்லை.
tamilkarthick
அருமையான கேள்விகள் தோழரே... இதற்கெல்லாம் சுபவீ பதில் சொல்வார் என்று மற்றும் நினைக்க வேண்டாம்.
uday
தொல்காப்பியத்திர்க்கு உரை எலுத தெரியாத கலைக்னர் யெப்படி தமில் மக்கலை காப்பார். நாம் தான் புரிந்து செயல் பட வென்ன்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.