கீற்று இணையதளத்தின் வளர்ச்சியில் படைப்பாளிகளுக்கு முக்கிய பங்குண்டு. கீற்றை ஆரோக்கியமான விவாதக்களமாகவும், சமகால இலக்கியம் மற்றும் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான தளமாகவும் மாற்றியதில் படைப்பாளிகளாகிய தங்களின் பங்கு அளப்பரியது. சமூகத்தில் மேலெழுந்து வரும் எந்தப் பிரச்சினை குறித்தும் ஆழத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அது குறித்து கீற்றில் தேடினால் குறைந்தது 30, 40 படைப்புகளாவது கிடைக்கும் என்றால் அந்தப் பெருமை, சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் படைப்பாளிகளையே சேரும்.

கீற்று வாசகர் சந்திப்பின்போது, வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களில் ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

ஏற்கனவே வேறொரு தளத்தில் வெளியான படைப்பை, மறுபடியும் கீற்றில் பார்ப்பது பெரும்பாலானோர்க்கு சலிப்பைத் தருகிறது. எனவே நீங்கள் கீற்றிற்கு அனுப்பிய படைப்பை தயவு செய்து வேறு எந்த தளத்திற்கும் அனுப்ப வேண்டாம் அல்லது வேறு தளத்தில் வெளியான படைப்பை கீற்றிற்கு அனுப்ப வேண்டாம். படைப்பு நேர்மையைக் கருதி, இந்தக் கோரிக்கையை தங்கள் முன் வைக்கிறோம்.

Blog வைத்திருக்கும் படைப்பாளிகள், தங்களது படைப்பு கீற்றில் வெளியானதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதை blog-ல் வலையேற்றம் செய்யுமாறு வேண்டுகிறோம்.

தங்களது படைப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தர கீற்று தயாராக இருக்கிறது. கீற்று இணையதளத்திற்கான பங்களிப்பை தாங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறோம். தங்களது படைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் என்றும் பெருமை கொள்கிறோம்.

Comments

2 comments

2
இ.பு.ஞானப்பிரகாசன்
இத்தனை நாட்களாக நான் இதைப் பார்க்கவில்லை. நான், கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, சில தனியார் வலைப்பூக்கள், என் வலைப்பூ இந்த ஐந்தில் மட்டும்தான் எழுதுகிறேன். இது வரை ஒருவருக்கு அனுப்பியதை இன்னொருவருக்கு அனுப்பியதில்லை. உங்களில் யாராவது ஒருவருக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெளியிட்ட மறுநாள் என் வலைப்பூவில் வெளியிட்டுவிடுவேன். நான் எழுதுபவை பெரும்பாலும், அரசியல் சமூகம் சார்ந்த கட்டுரைகளாக இருப்பதால் சூழ்நிலை மாறுமுன், உடனுக்குடன் வெளியிட வேண்டியிருக்கிறது. அதனால், 'கீற்'றில் வெளியான மறுநாளே நான் என் வலைப்பூவில் வெளியிட்டு விடுகிறேன். இனி, கூடிய வரை இந்த இரண்டு நாள் கெடுவைக் கடைப்பிடிக்கிறேன். நன்றி! வணக்கம்!
முனைவர் நா.இளங்கோ
வணக்கம்! பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ எழுதுகின்றேன்.
கீற்று முந்தைய வடிவில் இருந்தபோது பயனர்பெயர், கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்து படைப்புகளை சமர்ப்பித்து வந்தேன். என்னுடைய பல கட்டுரைகள் கவிதைகளை கீற்று இணையதளம் வெளியிட்டுள்ளது. கீற்றின் இப்போதைய வடிவமைப்பில் லாகின் செய்யும் வசதியோ படைப்புகளை சமர்ப்பிக்கும் வாய்ப்போ இல்லையே ? அன்புகூர்ந்து படைப்புகளை கீற்றுக்கு உள்ளீடு செய்யும் முறையைத் தெளிவுபடுத்துங்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.