எந்தவொரு பொருளாதார பின்புலமும் இன்றி, தோழர்கள் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தொடங்கப்பட்ட கீற்று.காம் மூன்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. திராவிட, தலித் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு பொதுவான ஒரு தளமாக கீற்றுவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி ஓரளவேனும் வெற்றி பெற்றதற்கு இந்தத் தோழர்களே காரணம். கீற்றுவுக்கு புதிய பத்திரிகைகளை அறிமுகப்படுத்தியது, கீற்றுவை படைப்பாளிகள், நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியது, தங்களது இதழ்களில் கீற்றுவுக்கு இலவச விளம்பரம் அளித்தது, கீற்றுவின் நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டி அதனை செழுமைப் படுத்தியது என இந்தத் தோழர்களின் உதவிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதோ நான்காம் ஆண்டில் கீற்று நுழைந்துவிட்டது. தமிழ் இணையதளங்களில் குறிப்பிடத்தகும் இணையதளமாக எங்களது இணையதளம் உயர்ந்ததற்கு மகிழ்வுறும் இந்த வேளையில் எங்களுக்கு உதவிய தோழர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.

இவர்களின்றி கீற்று இல்லை

ஆதவன் தீட்சண்யா
ஜெயபாஸ்கரன்
புனிதபாண்டியன், தலித் முரசு ஆசிரியர்
சுர்ஜித், indiaintellect
குமார், துபாய்
பூங்குழலி
சுப.வீரபாண்டியன்
டிராட்ஸ்கி மருது
கோவி.லெனின்
காமராஜ், விழிப்புணர்வு ஆசிரியர்
மாலதி மைத்ரி
அமர்நாத் & ராஜா, web developers
குருமூர்த்தி, தஞ்சாவூர்
கிரிஜா மணாளன், திருச்சி
ஆனாரூனா - தமிழ் சான்றோர் பேரவை
அருண், web developer

Pin It