‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஸ்டேக் டிரண்டிங் ஆகி சங்கி கும்பலுக்கு கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. திரைத்துறையைச் சேர்ந்த இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்களும் இந்திக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்து இருக்கின்றார்கள். அதே போல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அது போன்ற டிசர்ட் அணிந்தவர்களோடு புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்துள்ளார்.

Kanimozhi Hindi theriyathu poda தற்போது ‘இந்தி தெரியாது போடா’ என்று கலகம் செய்யப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி தினமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 22 மொழிகள் அரசியல் சட்டத்தின் விதிகள் 344(1), 355 ஆகியவற்றின் படி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது குறிப்பாக இந்திக்கு மட்டும் சிறப்புரிமை கொடுத்துக் கொண்டாடுவதன் மூலம் இந்திய அரசு என்பது இந்திக்கு மட்டுமே உரிய அரசு என்று பகிரங்கமாக கூச்சமே இல்லாமல் செய்யும் அற்பக் கூத்தைக் கண்டித்துதான் ஒவ்வொரு ஆண்டும் இந்தி பேசாத மாநில மக்களால் குறிப்பாக இந்தி எதிர்ப்பின் மையமாக இருக்கும் தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களிலும் #WeDontWantHindiDivas, #StopHindiImposition போன்ற ஹஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டன.

இந்த எதிர்ப்பு என்பது ஏதோ சிலருக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அவமதிப்பின் வெளிப்பாடாக நாம் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி "இந்தி தெரியாது" என்று சொன்னதற்காக விமான நிலைய அதிகாரி ஒருவர் "நீங்கள் இந்தியரா?" எனக் கேட்டது தமிழக மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே போல இயக்குநர் வெற்றிமாறனும் 2011ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் ரொம்பக் கோபமாகி, "நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க"ன்னு சொன்னதோடு தன்னைத் தனியாகவும் நிற்க வைத்து விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இன்று இந்திக்கு எதிராக குறிப்பாக சமூகக் கண்ணோட்டத்தோடு சிந்திக்கக் கூடிய பலபேர் ஒன்றாக எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம், அதன் பின்னுள்ள மதவாத அரசியலை எதிர்த்துத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியை எதிர்ப்பவர்கள் யாரும் அதை வெறும் ஒரு மொழியாக மட்டும் பார்க்கவில்லை; இந்தியை பார்ப்பனியத்தைப் பரப்பும் ஒரு கருவியாகவே பார்க்கின்றார்கள். இந்தி திணிக்கப்படுவது என்பதன் பொருள் பார்ப்பனியம் திணிக்கப்படுகின்றது என்பதுதான்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பார்ப்பனப் பாசிசத்திற்கு எதிரான வளமான மரபு கொண்ட ஒரே மாநிலமாக இந்தியாவில் தமிழகம் மட்டுமே இருக்கின்றது. தேவாரம், திருவாசகம் போன்ற நூற்றுக்கணக்கான குப்பைகளை தமிழில் எழுதி தமிழனின் மூளையில் பார்ப்பனியத்தைத் திணிக்க பார்ப்பனக் கூட்டமும் அதன் கைக்கூலி கூட்டமும் என்னதான் முயன்றாலும் அந்த மரபின் தொடர்ச்சியை ஒரு போதும் சிதைக்க முடிந்ததில்லை.

காலம்தோறும் பார்ப்பன எதிர்ப்பின் தொடர் கண்ணியை இன்று வரையிலும் தமிழகம் கொண்டிருப்பதன் காரணம் அதன் ஆன்மா பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான். 

இந்தி திணிப்பு என்பதை தமிழனின் மரபணுவின் மீது தொடுக்கப்படும் பெரும் தாக்குதலாகவே மானமுள்ள தமிழர்கள் உணர்கின்றார்கள். யுவன்சங்கர் ராஜாவோ, வெற்றிமாறனோ இந்தியை எதிர்ப்பது தங்களுக்கு அது தெரியாது என்பதைத் தாண்டி அதன் மீதுள்ள அரசியலால்தான். அப்படித்தான் நாம் புரிந்து கொள்கின்றோம்.

‘இந்தி தெரியாது போடா’ என்பதன் அர்த்தம் 'இந்தி தெரிந்து கொள்ள வேண்டிய எந்த ஒரு அவசியமும் எங்களுக்கில்லை போடா' என்பதுதான். இந்தியா என்ற போலியான ஒரு பொதியை தமிழகம் சுமந்து வருவதால்தான் அது பல இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. தன்னளவில் தனித்து ஒரு நாடாக இயங்கவல்ல எல்லா கூறுகளையும் தன்னகத்தே கொண்ட  தமிழ்நாட்டின் வருமானம் முழுவதையும் ஒரு கொள்ளைக்காரனைப்போல திருடிக் கொண்டு, அந்த வருமானத்தை உற்பத்தி செய்த ஒரு இனத்தை பஞ்சைப் பராரிகளாக புயல், மழை போன்ற பேரழிவு காலத்தில் கூட சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அந்நிய ஆக்கிரமிப்பாளனாகவே இந்தியாவை மானமுள்ள தமிழர்கள் பார்க்கின்றார்கள்.

அப்படிப்பட்ட இந்தியா என்ற ஆக்கிரமிப்பாளன் தன் வரலாற்றுத் தொடர்ச்சியை அழித்தொழிக்க முற்படும் போது அதற்கான எதிர்ப்பை ஏதாவதொரு வகையில் தமிழர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இந்தியை எதற்காக படிக்க வேண்டும் என்று ஒரு எளிய தமிழன் கேட்கும் கேள்விக்கு அதை திணிப்பவர்களிடம் ஒருபோதும் பதிலிருந்தது இல்லை.  

வேலை வாய்ப்புக்காக படிக்க வேண்டும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களின் இன்றைய பொருளாதார நிலை என்ன, இந்தி பேசாத மாநிலங்களின் பொருளாதார நிலை என்ன என்பதைப் புள்ளிவிவரங்களோடு தெரிவிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ள என்றால், இந்தி பேசும் மாநிலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உலகம் போற்றும் கண்டுபிடிப்புகள் என்ன, அறிவியலுக்கு இந்தி பேசும் மாநில மக்களின் பங்களிப்பு என்ன என்பதையும் மெய்ப்பிக்க வேண்டும். இல்லை, இந்திய ஒருமைப்பாடே எங்கள் நோக்கம் என்றால், இதுவரை இந்தி பேசாத மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின் போது இந்திய அரசு கொடுத்த நிவாரணம் எவ்வளவு, இந்தி பேசும் மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது கொடுத்த நிவாரணம் எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இதை எல்லாம் ஒளிவு மறைவின்றி பட்டவர்த்தனமாக அறிவித்தாலே இந்தியை வைத்து சங்கி கும்பல் செய்யும் அரசியலின் உண்மை தெரிய வரும்.

சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியைத் திணிக்கும் இவர்களின் நோக்கத்தின் பின் இருப்பது அப்பட்டமான பார்ப்பனியமே தவிர வேறு எதுவுமேயில்லை. போபாலில் 2015 ஆண்டு செப்டம்பர் 10  அன்று இந்தி மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய மோடி  ”சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய திலகர், ராஜாஜி போன்றவர்களின் தாய் மொழி இந்தி இல்லை, ஆனால் அவர்கள் இந்தி மொழியை ஓர் இயக்கமாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தார்கள், அவர்களிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர்” என்று சொல்லி இருந்தார்.

ஆனால் மோடி. குறிப்பிட்ட அந்த மூன்று பேரில் திலகரும், ராஜாஜியும் அப்பட்டமான இந்து மதவெறி பார்ப்பன பாசிஸ்டுகள் ஆவர்கள். அதில் 1937-ல் ராஜாஜி முதலமைச்சர் ஆனவுடன் இந்தியைத் தமிழ் மக்கள் மீது திணித்ததும், பிறகு பெரியார் அவர்கள் நடத்திய மிகப் பெரிய போராட்டத்திற்குப் பயந்து ராஜாஜி கட்டாய இந்தித் திணிப்பை விலக்கிக் கொண்டதும், மீண்டும் அதே ராஜாஜி 1957-ல் ‘ஒரு போதும் இந்தி வேண்டாம்’ என்று அந்தர்பல்டி அடித்ததும்தான் வரலாறு.

சென்ற ஆண்டு இந்தி தினத்தன்று அமித் ஷா தனது ட்விட்டரில் பக்கத்தில், "இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது இந்தி மொழியாகத் தான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

அதே போல இந்தியை ஐ.நா வில் 7- வது அலுவல் மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஆகும் செலவு 270 கோடியை இந்திய அரசே ஏற்கும் என்றும், பணம் ஒரு பொருட்டே அல்ல என்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கின்றார்.  இப்படி என்னதான் சங்கிகள் இந்தியை விதந்தோதினாலும், உண்மையில் இந்தி எபோதுமே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மொழியாக இருந்தது இல்லை என்பதுதான் உண்மை. தமிழகம் தவிர்த்த மற்ற இந்திய மாநிலங்கள் அனைத்துமே இந்தி பேசுவது போன்ற ஒரு மாயை தொடர்ச்சியாக சங்கி கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 25% மட்டுமே இந்தியை தங்கள் சொந்த தாய்மொழியாகப் பதிவு செய்திருக்கின்றார்கள். மீதமிருக்கும் 75 சதவீத மக்கள் தங்களின் சொந்த மொழிகளையே பேசுகின்றார்கள்.

அதனால்தான் சொல்கின்றோம், இந்தி திணிப்பு என்பது அப்பட்டமான பார்ப்பனியம் என்று. இன்று இந்தி பேசும் மாநிலங்களின் பொருளாதார நிலையைப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம். இன்று வட இந்தியாவைச் சேர்ந்த பலர் ஒருவேளை உணவு சாப்பிடும் நிலை இருக்கின்றது என்றால் அது இந்தி பேசாத தென்மாநில மக்கள் அளிக்கும் வரியினால்தான். வட மாநிலத் தொழிலாளர்கள் இந்தி பேசாத தென்மாநிலங்களில் பணி செய்து அனுப்பும் பணத்தில்தான் அவர்களது சொந்த மாநிலத்தில் வாழும் அவர்களது குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. இந்தி பேசாத தென் மாநிலங்கள் இல்லை என்றால், வட மாநிலங்கள் எல்லாம் என்றோ சுடுகாடு ஆகியிருக்கும்.

அதனால் இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு இந்தி பேசும் மாநிலங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சங்கு கும்பல் முயற்சிப்பதே உண்மையில் இந்தி பேசும் மக்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாகும். அப்படி இல்லாமல் பார்ப்பனியத்தைத் திணிக்க இந்தியைத் திணித்தால் நாங்கள் உண்மையில் உரத்துச் சொல்வோம் ‘இந்தி தெரியாது போடா’ என்று மட்டுமல்ல, ‘இந்தி எங்களுக்கு அவசியம் இல்லை போடா’ என்றும்...!

- செ.கார்கி

Comments

18 comments

18
S.Periyasamy
ஹிந்தியை மத்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்கி இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி அவர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் அவமானப்பட வைத்தது காங்கிரஸ் கட்சி. அவர்கள் தான் இந்தியாவின் ஆட்சி மொழி சட்டத்தை கொண்டுவந்தவர்கள். இப்போது மத்தியில் இருக்கும் சங்பரிவாரத்தினர் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துகிறார்கள். ஏதோ மோடியும் அமித் ஷாவும் தான் ஹிந்தி திணிப்புக்கு முழு காரணம் அவர்கள்தான் ஆட்சிமொழி சட்டத்தை கொண்டுவந்தவர்கள் என்பது மாதிரி இந்தக் கட்டுரை ஆசிரியர்புளுகி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் சில மாதங்களில் வருகிறது. அதனால்தான் இந்தி தெரியாது போடா முதலிய டி-சர்ட் நாடகங்கள் திமுக அடிப்பொடிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இவர்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்சாலை கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதுவதற்கான உத்தரவில் டி ஆர் பாலு தான் கையெழுத்து இட்டதாக கூறுவார்கள். இந்தியை அமல் செய்யும் துறைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் தான் வருகின்றன. இந்த அமைச்சகத்தில் தான் பல ஆண்டுகாலம் பா சிதம்பரம் அமைச்சராக இருந்தார். இவர் இப்போது இந்தி வெறியால் தான் பாதிக்கப்பட்டதாக பித்தலாட்டம் செய்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி ஓட்டுப் பொறுக்குவதற்காக இவர்கள் என்னவெல்லாம் நாடகம் போடுகிறார்கள். இந்த மாதிரியான பித்தலாட்ட காரர்களையும் மண் குதிரைகளையும் நம்பி மோசம் போகாமல் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு வேறு வழியில்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்தவே செய்வார்கள்.
இந்த தளத்தை நடத்துபவர்கள் கருத்து சுதந்திரத்தை சிறிதுகூட நம்பாதவர்கள் போல. இந்த தளத்தில் எழுதும் பெரும்பாலானவர்கள் முட்டாள்தனமாக அல்லது வேறு உள்நோக்கத்தோடு எழுதுகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பின்னூட்டம் இட்டால் அதை வெளியிடுவதே இல்லை. என்ன இணையதளம் நடத்துகிறார்களோ!
செ.கார்கி
இந்தியை எதற்காக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் போகிறபோக்கில் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்களின் அறிவுஜீவித்தனம் பல்லிளிக்கின்றது.
S.Periyasamy
இந்தியாவின் ஆட்சி மொழியாக தேவநாகரி லிபியில் எழுதப்படும் ஹிந்தி இருக்கும் என அம்பேத்கார் வகுத்த இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மொழியை இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் கற்பிக்க வேண்டும் எனவும் அரசியல் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவில்தானே ஒரு மாநிலமாக இருக்கிறது? அப்படி எனில் அந்த சட்டத்தை எப்படி மறுக்க முடியும்?. இந்தி தேவை இல்லை எனில் இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் அதிகாரம் கிடைத்த போது முயற்சி செய்து அந்த சட்டத்தை திருத்தி இருக்க வேண்டும். கடந்த 70 ஆண்டு காலமாக இவர்கள் அதை செய்யவில்லை. ஹிந்தி மொழி பரவலாக்கம் மத்திய அரசின் முயற்சியால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆங்கிலம் மற்றும் மற்ற இந்திய மொழிகளின் இடம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. இப்படிப்பட்ட நிலையால் சாமானிய மக்களுக்கு ஹிந்தியை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ்நாட்டுக்கு அரசாங்கம் எனில் அது மத்திய அரசுதான். மாநில அரசு என்பது மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட, சில அதிகாரங்களை மட்டுமே கொண்ட, உள்ளூர் நிர்வாகம். திராவிட கட்சிகள், குறிப்பாக திமுக, மத்திய அரசில் ஆட்சி அதிகாரம் கையில் கிடைக்கும்போது இந்த மாதிரி பாதகமான சட்டங்களை திருத்த எந்த முயற்சியும் இதுவரை எடுத்ததில்லை. ஊழலும் குடும்ப வாரிசு அரசியலும் மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். ப.சிதம்பரம் மாதிரியானவர்களும் இவ்வாறு தான். அதிகாரத்தில் இல்லாத போது தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்குவதற்காக இந்த மாதிரி டீ சர்ட் பிரச்சினைகளை அடிப்பொடிகள் மூலம் கிளப்பி மக்களை முட்டாள் ஆக்குவார்கள். ஓட்டு வாங்கி அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊழலும் குடும்ப அரசியலும் நடத்தி சொந்த மக்களையே ஏமாற்றி சுரண்டி கழுத்து அறுப்பார்கள். இதுதான் கடந்த அரை நூற்றாண்டு கால தமிழ்நாட்டின் அனுபவம். இந்தக் கட்டுரை ஆசிரியர் மாதிரியானவர்கள் இந்த கழுத்தறுப்புக்கு உடந்தை. இந்த மாதிரி நம்ப வைத்து கழுத்தறுத்து கொள்ளையடிப்பவர்களையும் கையாலாகாத மண் குதிரைகளையும் நம்பி மோசம் போவதைவிட இந்தியாவின் ஆட்சி மொழி சட்டத்தை ஏற்று தமிழ்நாட்டின் சாமானிய மக்கள் இந்தி படித்து விட்டு போவது உத்தமம்.
Rajan
//We do not have any way to avoid Hindi.The Central govt by whichever party would implement official language Hindi//To know this gospel truth,we need not read Periyasamy's comment.Not only this issue,whether the unscientific NEP or denial of jobs in Chennai IIT, for SC/ST/OBCs,Periyasamy will tell that these things are bound to happen.Why this defeatist tendency from a person coming from a "middle caste" who has respect for Periyar??He will focus on criticizing the opposition parties only.Some times,he will pass wild allegations against opposition leaders which would be quite irrelevant to the issues discussed here.Which statement of his (mostly of defamatory nature)not published here?By the bye,Mr Periyasamy,Hindi cannot be imposed on non-Hindi people unless and until they accept it as per the Official Languages Act quoted by him.
Rajan
Mr Periyasamy,Due to Hindi agitations in 1965 led by DMK and supported by P.C.Sen,CM of West Bengal,Brahmananda Reddy,CM of Andhra and Nijalingappa,CM of Karnataka,the Official Languages Act,1963 was amended in 1968 to enable English to continue to be the official language along with Hindi till such time the assemblies in non-Hindi speaking States accept Hindi as sole official language.Please read actual history before casting aspersions on opposition parties.
S.Periyasamy
Mr Rajan,
The amendment to official languages act in 1968 did not give reprieve to non hindi people as it did not address the hindi domination in any way. It confirmed once again that hindi is the supreme official language in non hindi regions too. English got included only as a co-official language. So no problem in imposing Hindi language on non Hindi people. Including English as co-official language was a cunning ploy to pit english against the respective regional language and to divert the controversy on dominant status of hindi in non hindi regions. In toto, that amendment is a deceptive one. These dravidian politicians are corrupt to the core and cheat their own people. Some shameless guys like you are batting for them.
Rajan
The Official Languages Act,1963 as amended in 1968 will prevent imposing Hindi on non-Hindi States like the Official Languages Act,1950 which had provision for usage of English till 1965.The dravidian parties will never cheat their own people and you are the shameless slave inviting imposition of Hindi.There is no "supreme"official language as such and it is your own imagination.
S.Periyasamy
இந்தி பேசாத மக்கள் இந்தியை விரும்பும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்குமென நேரு உறுதிமொழி கொடுத்தார். அதைத்தான் இங்கு இருப்பவர்கள் சட்டத்திருத்தம் என சொல்லி பித்தலாட்டம் செய்து வருகிறார்கள். ஒரு பித்தலாட்டத்தை மறைக்க இன்னொரு பித்தலாட்டம் என இருப்பவர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது. திராவிட கட்சிகள் என்னும் மண் குதிரைகளையும் பிராடு களையும் நம்பி மோசம் போகாமல் தமிழ்நாட்டு மக்கள் ஹிந்தி படிக்க ஆரம்பிப்பது நல்லது.
Rajan
Mr Periyasamy,You are the only person who is going on telling lies.
Article 343(1) of the Constitution provides that Hindi in Devanagari script shall be the Official Language of the Union.Article 343(2) also provided for continuing the use of English in official work of the Union for a period of 15 years (ie up to 25th Jan,1965) from the date of commencement of the Constitution.Article 343(3) EMPOWERED the parliament to provide by law for CONTINUED use of English for official purposes even after 25th Jan,1965.Accordingly,section 3(2) of Official Languages Act,1963 (amended in 1967) PROVIDES for continuing use of English in official work EVEN AFTER 25th Jan,1965.The Act also lays down that both Hindi and English shall COMPULSORILY be used for certain specified purposes such as Resolutions,General Orders,Rules,Notifications,Administrative and other Reports,Press Communiques and Official Papers to be laid before a House or the Houses of Parliament;Contracts,Agreements,Licences,Permits,Tender Notices and Forms of Tender etc.In 1976,Official Languages Rules were framed under the provisions of section 8(1) of the Official Languages Act,1963 which provide for communications from a Central Government Office to a State Government Office in region "C" comprising all other States(Tamil Nadu comes under region "C")or to any office (not being a Central Government Office) or person SHALL BE IN ENGLISH.
The Act itself was amended in 1967 to provide that the use of English WOULD NOT BE ENDED until a resolution to that effect was passed by THE LEGISLATURE OF EVERY STATE that had NOT adopted Hindi as its Official Language,and by EACH HOUSE OF THE INDIAN PARLIAMENT.
Now,the KEETRU readers would know who is bluffing here and urges TN people to learn Hindi.
Rajan
All the details furnished here by me are available in the following Central Govt websites;-(1)knowindia.gov.in and (2)rajbhasha .gov.in
D.RAMESH
தோழருக்கு வணக்கம்,
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்கத்தைப் பொறுத்தவரை திராவிட பண்பாட்டின் எழுச்சியே. இன்று மேலும் தீவிரமாகியுள்ளது. ஹிந்திக்கு ஆதரவுக் குரல் எடுப்பவர்கள் கீழ்க்காணும் கேள்விகளை எழுப்புகின்றனர். அதற்கு நமது எதிர்வினை தேவை . அவை என்னவெனில்..
1. ஹிந்தியை எதிர்க்கும் படித்தவர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை CBSE பள்ளிகளில் ஹிந்தி படிக்க வைத்துவிடுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஹிந்தி படிக்க விரும்பினால் எப்படி படிப்பார்கள்?
2. ஹிந்தியை எதிர்க்கும் திமுகவினரே CBSE பள்ளிகளை நடத்துவதும் அங்கு ஹிந்தி கற்றுத்தருவதும் சரியா?
3.ஹிந்தியை எதிர்க்கும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கேந்திரியா பள்ளிகளில் குழந்தகளை சேர்க்க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவை பயன்படுத்துவது சரியா?

நன்றி!
S.Periyasamy
திரு ராஜன்
திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆட்சிமொழி சட்டத்தின்படி இந்தி பேசாத பகுதிகளிலும் ஹிந்தி தான் முதன்மை ஆட்சி. மொழி. போனால் போகட்டும் என்று கூடுதல் ஆட்சிமொழியாக ஆங்கிலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தி பேசாத பகுதிகளில் இந்திய திணிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. . அதனால்தான் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத பகுதிகளில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் ஹிந்தி செல்கள் அமைக்கப்பட்டு இந்தி பரப்பப்படுகிறது. மேற்படி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விஜயம் செய்யும் மத்திய அரசின் இந்தி அமலாக்க குழுவினர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஆங்கிலத்தை எடுத்துவிட்டு எப்படி எல்லாம் இந்தியை அமல் செய்யலாம் என அறிவுரை கூறி விட்டு கேள்விகளை கேட்டு விட்டு போவார்கள். இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருக்கக்கூடிய நடைமுறை. இந்தி பேசாத பகுதிகளில் ஆங்கிலம் தான் மத்திய அரசின் ஆட்சி மொழி என திருத்தம் செய்யப்படவில்லை. ஆங்கிலத்தை இரண்டாம் இடத்தில் வைத்து அந்தந்த மாநில மொழிக்கான இடம் மறுக்கப்பட்டு ஆங்கிலத்தின் மீதான வெறுப்புக்கு இந்த சட்டம் வழி செய்திருக்கிறது. மற்றபடி ஹிந்தி பேசாத பகுதிகளில் இந்தியை திணிப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஊழலிலும் சுயநலத்தில் துரோக தளத்திலும் ஊறிப்போன திராவிட கும்பல்களை நம்புவது தற்கொலைக்கு சமம். அதனால் தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் ஹிந்தி படிப்பது நல்லது. இன்று இல்லாவிட்டாலும் நாளை அது நடக்கத்தான் போகிறது.
Rajan
Whether Central Govt imposes Hindi or not, Periyasamy only wants to impose it with missionary zeal.In his madness,he blabbers in his comments.He told that the Official Language Act was brought by Congress Govt only and the present Govt only implement the Act (vigorously) and that opposition parties never took steps to stop the imposition for the past 70 years.Has he come from a different planet?How a Tamilian can miss the anti-Hindi struggle of 1965?Nehru had promised that Hindi would not be imposed against the wishes of non-Hindi States. What forced him to give that assurance?The anti-Hindi agitation was raging in TN right from 1938.Even when the Act was put for voting in the Constituent Assembly in 1950,there were 77 votes for Hindi and 77 votes against Hindi.Only by the casting of vote by the Head of the Constituent Assembly in favor of Hindi,it could be passed.My dear friend,Nehru's promise was made as an Act under section 17 of the Official Languages Act,1950 ITSELF enabling English to continue as Official Language till 1965.Again the promise, without any time limit, was made into an Act by the amendment in 1967.I contest your argument saying that Hindi is the Official Language in non-Hindi States also.No,my dear friend.If yours is a correct statement,the Central Govt officials would have entered State Govt offices and would have started Hindi Cells and all correspondence from Delhi to Chennai would be only in Hindi.
He says that the present Govt simply follow the footsteps of the previous Govt in propagating Hindi and implementing the Act already passed.Are they following all Acts passed by the previous Govt? BPCL is a profit making PSU and was nationalized by Congress Govt.. Why steps are taken to sell its shares now?
Just because Hindi is one of the two official languages,TN students need not learn Hindi.Moreover,TN State is following two-language policy.Just because the present State Govt is docile on many matters. Periyasamy cannot make atrocious statement saying that Govt means Central Govt and the State Govt is just a state level administrative set-up only.The State has its own legislative assembly. The present state of affairs will not remain forever.Just like his ignorance on the language issue ,he is blind to the State Autonomy and the powers of State Governments. Do not indulge in your scare mongering among the TN students.
Rajan
Constitutional Assembly members from South India like T.T.Krishnamachari ,G.Durgabai, T.A.Ramalingam Chettiar,N.G.Ranga,N.Gopalaswamy Ayyangar (he was one of seven member committee which drafted the Indian Constitution under the Chairmanship of Dr.B.R.Ambedkar) and S.V.Krishnamurthy (Mysore) opposed making Hindi as National Language of India.(the original proposal was to make Hindi as National Language)
Rajaji,once a staunch supporter of Hindi organized an All India Language Conference (attended by the representatives of Tamil,Malayalam,Telugu,Assamese,Oriya,Marathi,Kannada and Bengali languages) on 8-3-1958 to oppose the switch from English to Hindi declaring "Hindi is as much foreign to non-Hindi speaking people as English to the protagonists of Hindi"
Rajan
Periyasamy says that Anti-Hindi slogans are raised in TN by some political parties only to garner votes in the next assembly election.So,he clearly knows that the imposition of Hindi is opposed not only by some political parties but by all Tamilians. I again advise him not to be a frog in the well.Has he read today's newspapers?Anti-Hindi Divas (14-9-2020)agitations were wide spread across entire Karnataka.In Mandya,Hubli and Ramnagar protests against Hindi imposition were held in front of Central Govt offices.The protests were spearheaded by Janata Dhal (Secular),Kannada Ratchana Vedike,Kannada Nava Nirman Sena,Kannada Savuli Pary etc.In Bangalore City Railway Station,Hindi letters in boards were disfigured. Kumaraswamy,(son of former PM Deve Gowda ), himself a former CM,has issued a statement "Celebration of Hindi Divas is part of Hindi imposition only .Nowhere in the Constitution, Hindi is mentioned as National Language. Why Hindi Divas to be celebrated in a non-Hindi state? They should stop the practice of celebrating Hindi Divas before entire Kannada people revolt against it " Karnataka Assembly election is due in May,2023 only.Other States like Kerala and West Bengal also expressed opposition to Hindi imposition.-Source-Hindu Tamil Thisai -15-9-2020.
S.Periyasamy
Mr Rajan is unable to explain why Hindi cells are setup in non Hindi States and Hindi is promoted in those regions despite the so-called amendment to the official languages act. The official languages act of the Indian government with the so called amendment, clearly consolidates the the supreme official language status of Hindi indirectly and mandates the union government to spread teeit in non Hindi regions. Once upon a time state governments for enjoying some degree of autonomy but not now. At present they are just local administrative units. Even the financial powers vested with state governments have got grabbed by the union government in the form of GST. Which ever party is coming to power in State administration has to toe the line of the party occupying the centre. Otherwise the state administration may even get dismissed. Just living in utopian world it will not help anybody. Tamil Nadu people should not trust these Dravidian parties especially DMK. Which are corrupt to the core. These parties lack principles and promote corruption and family interests. So it is better for Tamils to learn Hindi and join with people of other non Hindi States regarding this matter.
Rajan
Periyasamy proves that he is a parrot repeating whatever he says many times that too with oozing venom on Dravidian parties.He also proves that he is a bonded slave to the Central Govt.He has forgotten that there were State Govts in TN with back-bone in the past.Hindi learning is promoted only in Central Govt offices.Better kneel before the Central Secretariat. I doubt whether he is a paid troll.
S.Periyasamy
Mr Rajan,
It is you who behave like the troll of these corrupt Dravidian parties like DMK.I myself speak the reality. My question is why Hindi should be promoted in Central government institutes in Nan Hindi regions despite English being included as official language. Because English is included only as co official language and so the official language in t is Hindi in Nan Hindi regions also. The amendment to the the official languages act it is deceptive. The anti Hindi agitation in Tamil Nadu was Hijacked by the DMK party an for political dividends. DMK is a cut throat. Enemies are better than cut throats. This is my humble opinion.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.